உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புரோஜோன் மாலில் தி ஜங்கிள் புக் நிகழ்ச்சி

புரோஜோன் மாலில் தி ஜங்கிள் புக் நிகழ்ச்சி

கோவை; புரோஜோன் மால் சார்பில், 'தி ஜங்கிள் புக் - அட்வென்ச்சர் லைவ் எக்ஸ்பீரியன்ஸ்' நிகழ்ச்சி கடந்த, 15ல் துவங்கியது; வரும் 24ல் நிறைவடைகிறது. மால் நிர்வாகிகள் கூறியதாவது: கோவையில் முதல் முறையாக, இந்நிகழ்ச்சியை நடத்துகிறோம். மால் வளாகத்தில், காலை 11 முதல் இரவு 10 மணி வரை நடக்கிறது. பார்வையாளர்களுக்கு நுழைவு கட்டணம் இல்லை. குழந்தைகள் பங்கேற்கும் விளையாட்டுகள் மற்றும் செயல்பாடுகளுக்கு, ரூ.149 கட்டணம் நிர்ணயித்துள்ளோம். 'தி ஜங்கிள் புக்' தொடரில் வரும் கதாபாத்திரமான பாலுவுக்கு, உணவளித்தல், மோக்லிக்கு காட்டில் வழிகாட்டுதல், ஆபத்தான நதியை கடப்பது, பகீராவுக்காக ஆப்பிள் சுடுதல் போன்ற குழந்தைகளுக்கான சிறப்பு விளையாட்டு போட்டிகள், வரும் 24ம் தேதி வரை நடக்கின்றன. பலுான், ஸ்டிக்கர், லேபிள், வண்ணமயமாக்கல் புத்தகம், சுவரொட்டிகள் குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. டிக்கெட்களை, Ticketprix.comஎன்ற இணையதளத்திலும், புரோஜோன் மால் கவுன்டரிலும் பெற்றுக்கொள்ளலாம். இத்துடன், சாகச விளையாட்டுகள், கலை நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை