மேலும் செய்திகள்
ஏழாவது நாளாக கோர்ட் புறக்கணிப்பு
1 minutes ago
மகா பைரவர் கோயிலில் மண்டபம் திறப்பு விழா
2 minutes ago
காவலாளி வீடு மீது ஆசிட் வீச்சு
9 minutes ago
�... � மேட்டுப்பாளையம்: காந்தையாற்றில் தண்ணீர் தேங்கி இருப்பதால், உயர் மட்ட பாலம் கட்டும் பணி நிற்கிறது. மாதக்கணக்கில் தண்ணீர் தேங்கி இருப்பதால், பாலம் கட்டுமானம் தொடருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை பேரூராட்சியில், காந்தவயல், காந்தையூர், மொக்கை மேடு, உளியூர் ஆகிய மலைவாழ் கிராமங்கள் உள்ளன. காந்தவயலுக்கும் லிங்காபுரத்துக்கும் இடையே காந்தையாறு ஓடுகிறது. ஆற்றில் தண்ணீர் தேங்கி இருந்தால், மலைவாழ் மக்கள் பரிசலில் பயணம் செய்வர். இந்த பிரச்னைக்கு தீர்வு காண, காந்தையாற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் கட்ட, 15 கோடியே, 40 லட்சம் ரூபாய் நிதியை தமிழக அரசு ஒதுக்கியது. இப்பாலத்தை இரண்டு ஆண்டுகளில் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 2023ம் ஆண்டு பிப்ரவரியில், பாலம் கட்டும் பணிகள் துவங்கின. இரண்டு ஆண்டுகளில் ஆற்றின் குறுக்கே ஐந்து பில்லர்களும், இரண்டு இடங்களில் பாலத்தின் மீது சாலையும் அமைத்துள்ளனர். தற்போது பாவனி சாகர் அணையில், 102 அடிக்கு நீர் மட்டம் உயர்ந்ததால், காந்தையாற்றில், தண்ணீர் அதிக அளவு தேங்கி உள்ளது. அதனால் பாலம் கட்டுமானப் பணிகள் நிற்கின்றன. காந்தவயல் மலைவாழ் மக்கள் கூறியதாவது: காந்தையாற்றில் உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் துவங்கியதை அடுத்து, நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம். தற்போது ஆற்றில் தண்ணீர் தேங்கி இருப்பதால், பாலம் தொடர்ந்து கட்டப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆறுகளிலும், கடல்களிலும் பல அடி ஆழத்துக்கு தண்ணீர் தேங்கி இருந்தாலும், பாலங்கள் கட்டுகின்றனர். அப்படி இருக்கும் போது, இந்த ஆற்றில் ஏன் பாலம் கட்டாமல் உள்ளனர். அதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பாதியில் நிற்கும் பாலம் கட்டுமானத்தை நிறைவு செய்ய வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
1 minutes ago
2 minutes ago
9 minutes ago