உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாலிபரை காப்பாற்ற முயன்ற தொழிலாளி விஷவாயு தாக்கி பலி

வாலிபரை காப்பாற்ற முயன்ற தொழிலாளி விஷவாயு தாக்கி பலி

கோவை : வாலிபரை காப்பாற்ற முயன்ற தொழிலாளி விஷ வாயு தாக்கி பலியானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.சேலம் மாவட்டம் நெய்க்காரப்பட்டியை சேர்ந்தவர் சரவணன், 45. இவர் கோவை சரவணம்பட்டியில் தங்கி இருந்து தனியார் நிறுவனத்தில் பிளம்பராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் சரவணன் பீளமேடு தண்ணீர் பந்தல் ரோட்டில், கவுதமபுரி நகர் அருகே இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு குடிநீர் குழாய்களின் வால்வு திறப்பதற்காக கட்டப்பட்டிருந்த 10 அடி ஆழ தொட்டியில் ஒருவர் மயங்கி கிடப்பதை சரவணன் பார்த்தார். உடனடியாக அந்த தொட்டியில் மயங்கி கிடந்தவரை காப்பாற்றுவதற்காக சரவணன் இறங்கினார். இதில் அவரும் விஷ வாயு தாக்கி மயங்கினார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள், பீளமேடு போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த கணபதி தீயணைப்புத் துறையினர், உள்ளே இறங்கி இருவரையும் மேலே துாக்கி வந்தனர். பின் கோவை அரசு மருத்துவமனையில் இருவரையும் அனுமதித்தனர். அங்கு சரவணனை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். விசாரணையில் அவர் பெயர் அஜய்குமார், 19 என்பது தெரியவந்தது.இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்கு பதிந்து தண்ணீர் தொட்டிக்குள் விஷ வாயு கசிந்தது எப்படி, அல்லது வேறு ஏதாவது காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். வாலிபரை காப்பாற்ற முயன்ற தொழிலாளி விஷ வாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை