உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மன்னீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா

மன்னீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா

அன்னுார் ; மேற்றலை தஞ்சாவூர் என்று அழைக்கப்படும், பழமையான அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலில், 49 வது ஆண்டு மகா சிவராத்திரி விழா வருகிற 26ம் தேதி நடைபெறுகிறது. மாலை 6:00 மணிக்கு கணபதி பூஜையும், இரவு 7:00 மணிக்கு முதற்கால அபிஷேகமும், இரவு 11:00 மணி, நள்ளிரவு ஒரு மணி மற்றும் மறுநாள் அதிகாலை 3:30 மணிக்கு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது.இரவு 10: 00 மணிக்கு, அச்சம்பாளையம் சண்முகம் குழுவின் பஜனை துவங்கி, மறுநாள் அதிகாலை வரை நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !