வேட்டிய மடிச்சுக்கட்டி களமிறங்கிய எம்.எல்.ஏ.,
கோவை: சிங்காநல்லூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட நஞ்சுண்டாபுரத்தில் மின்மயானம் செயல்பட்டு வருகிறது. இந்த மின் மயானத்தின் மேற்கூரை பழுதடைந்து மழையில் ஒழுகுவதாக புகார் எழுந்தது.இதையடுத்து, சிங்காநல்லூர் எம்.எல்.ஏ., ஜெயராம், நேற்று அங்கு ஆய்வு செய்தார். வேட்டியை மடித்துக் கட்டி, ஏணியில் ஏறி, மேற்கூரையைப் பார்வையிட்டார்.அவர் கூறுகையில், “மேற்கூரையை சரி செய்து, நீர் கசியாத வகையில் டைல்ஸ் பதிக்க வேண்டும். சுற்றுச்சுவரும் விழுந்துள்ளது. முன்னுரிமை அடிப்படையில் மேற்கூரையை முதலில் சரி செய்ய வேண்டும். தொகுதி மேம்பாட்டு நிதியை ஒதுக்க தயாராக உள்ளேன்,” என்றார்.