மேலும் செய்திகள்
மடத்துக்குளம் பகுதியில் மரக்கன்றுகள் நடவு
28-Nov-2024
தொண்டாமுத்தூர்; தமிழகத்தில், ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில், ஒரே மாதத்தில், 15.23 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.ஈஷாவின், காவேரி கூக்குரல் இயக்கத்தின் சார்பில், தமிழகம் முழுவதும் இயங்கி வரும் நர்சரிகள் மூலம் கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும், விடுமுறை நாட்கள் தவிர்த்து, நாள் ஒன்றுக்கு, 60,000க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் வீதம் மொத்தமாக, 15,23,255 மரக்கன்றுகள் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் நடவு பணிக்காக வழங்கப்பட்டுள்ளது.ஈஷா நர்சரிகள் துவங்கப்பட்டதிலிருந்து, அதிகபட்சமாக, 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் ஒரே மாதத்தில் வழங்கப்பட்டு இருப்பது, இதுவே முதல் முறையாகும்.இதுகுறித்து, காவேரி கூக்குரல் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் கூறுகையில், காவேரி கூக்குரல் இயக்கத்தின் சார்பில், தமிழகம் மற்றும் கர்நாடகாவில் மொத்தம், 82 நர்சரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், 39 உற்பத்தி நர்சரிகளும், 43 வினியோக நர்சரிகளும் செயல்படுகின்றன.இந்த நர்சரிகளின் ஆண்டு மொத்த உற்பத்தி, 1.48 கோடி மரக்கன்றுகள். தமிழ்நாட்டில் மட்டும், 40 நர்சரிகள் செயல்பாட்டில் இருக்கின்றன.இந்த ஆண்டு மட்டும் இதுவரை, 85 லட்சம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த நவம்பர் மாதம் மட்டும், 15,23,255 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன, என்றார்.
28-Nov-2024