உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மில்களில் தீ அணைக்க பழைய தீயணைப்பு வாகனம் போதாது மில்களில் தீ ஏற்பட்டால் அணைக்க தீயணைப்பு வாகனம் போதாது

 மில்களில் தீ அணைக்க பழைய தீயணைப்பு வாகனம் போதாது மில்களில் தீ ஏற்பட்டால் அணைக்க தீயணைப்பு வாகனம் போதாது

அன்னூர்: அன்னூர் தாலுகாவில், கரியாம்பாளையம், கணேசபுரம், பசூர், பொகலூர், கோவில்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 80க்கும் மேற்பட்ட ஸ்பின்னிங் மில்கள் உள்ளன. 20க்கும் மேற்பட்ட ஜின்னிங் பேக்டரிகள், விசைத்தறிகள் உள்ளன. அன்னூரில் 2015ம் ஆண்டு தீயணைப்பு நிலையம் துவக்கப்பட்டது. சொந்த இடமும், கட்டடமும் இல்லாததால், மேட்டுப்பாளையம் சாலையில், ஜீவா நகரில், சிறிய வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் கூறுகையில், 'கோவை மாவட்டத்தில் சூலூருக்கு அடுத்தபடி அன்னூர் தாலுகாவில் தான் அதிக அளவில் ஸ்பின்னிங் மில்கள், ஜின்னிங் பேட்டரிகள் உள்ளன. பருத்தி, பஞ்சு, நூல் அதிக அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எனவே, தீ விபத்து ஏற்பட்டால் விரைந்து வந்து தீயை அணைத்து சேதத்தை குறைக்க தீயணைப்பு நிலையத்தையே தொழில் முனைவோர் நம்பியுள்ளனர். ஆனால் தீயணைப்பு நிலையம் அமைத்து, 10 ஆண்டுகள் ஆகியும் ஒரு வாகனம் மட்டும் உள்ளது. அந்த வாகனமும் மிதமான வேகத்தில் மட்டுமே செல்கிறது. வேறு பல தீயணைப்பு நிலையங்களில் விரைந்து செல்லும் வாகனம் உள்ளது. ஒரு டேங்க் தண்ணீர் தீர்ந்தவுடன், மீண்டும் மற்றொரு டேங்க் தண்ணீர் நிரப்பி எடுத்து வருவதற்குள் சேதம் அதிகரித்து விடுகிறது. அன்னூர் தீயணைப்பு நிலையத்திற்கு சொந்தமாக கட்டடம், கூடுதலாக தீயணைப்பு வாகனம், ஒதுக்க வேண்டும். வேகமாக செயல்படும் வாகனம் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். கூடுதலாக தீயணைப்பு வீரர்கள் நியமிக்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை