உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரோடு சீரமைக்க ஊராட்சியில் நிதியில்லை! மாவட்ட நிர்வாகம் உதவுமா?

ரோடு சீரமைக்க ஊராட்சியில் நிதியில்லை! மாவட்ட நிர்வாகம் உதவுமா?

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, சொக்கனூர் ஊராட்சியில் உள்ள ரோடுகளை சீரமைக்க வேண்டுமென, மக்கள் வலியுறுத்துகின்றனர்.கிணத்துக்கடவு ஒன்றியம், சொக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் பெரும்பாலானோர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.இப்பகுதியில் உள்ளவர்கள், கோவை மற்றும் பொள்ளாச்சி பகுதிகளுக்கு வேலை, பள்ளி மற்றும் கல்லூரிக்கு சென்று வருகின்றனர்.சொக்கனூர் ஊராட்சியின் முக்கிய ரோடுகளான, மேட்டுக்கடை முதல் பெரும்பதி பிரிவு வரை, 2 கி.மீ., தூரம் சேதமடைந்துள்ளது. இந்த வழித்தடத்தில், அரசு மேல்நிலைப்பள்ளி, முத்துமலை முருகன் கோவில், மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் உள்ளன.இதே போன்று, மேட்டுக்கடை முதல் சட்டக்கல்புதூர் பாறை வரை, 3 கி.மீ.,க்கு ரோடு சேதம் அடைந்துள்ளது. இந்த இரண்டு ரோடும் போடப்பட்டு, 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது.ரோட்டின் இரு புறங்களிலும், தோட்டத்து வீடுகளும், விளைநிலங்களாகவும் உள்ளது. சேதம் அடைந்த ரோட்டில் பள்ளி, கல்லூரி வாகனங்கள், விளை பொருட்களை எடுத்து செல்லும் வாகனங்கள் பயணிக்கின்றன.இரவு நேரத்தில், வாகன ஓட்டுநர்கள் தடுமாறி விழுகின்றனர். எனவே, அனைத்து தரப்பினர் நலன் கருதி ரோட்டை விரைவில் சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் வலியுறுத்துகின்றனர்.ஊராட்சித் தலைவர் திருநாவுக்கரசு கூறியதாவது:சொக்கனூர் ஊராட்சியில் சட்டக்கல்புதூர் பாறை செல்லும் ரோடு மிகவும் மோசமாக உள்ளது. ஊராட்சியில் போதிய நிதி இல்லாததால் இந்த ரோடு சீரமைக்க இயலவில்லை. மேலும் ரோட்டின் இருபுறமும் அதிகளவு செடிகள் முளைத்து இருந்தது.இதனால், ரோட்டின் முக்கிய வளைவு பகுதி மற்றும் விபத்து ஏற்படும் இடங்களில் மட்டும் புதர்செடிகள் அகற்றம் செய்யப்பட்டது. ரோட்டை சீரமைக்க ஒன்று முதல் ஒன்றரை கோடி ரூபாய் வரை நிதி தேவைப்படும். எனவே, இந்த ரோட்டை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உதவும் பட்சத்தில் ரோடு சீரமைக்கப்படும்.இவ்வாறு, கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி