பெண்ணை படம் எடுத்தவர் கைது
கோவை: பீளமேடு பகுதியில் பேருந்துக்காக காத்திருந்த பெண்ணை, போட்டோ எடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.பீளமேடு, ஹோப் காலேஜ் பகுதியில் உள்ள டைடல் பார்க்கில், நேற்று முன்தினம், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 25 வயது பெண் ஒருவர், நேர்காணலுக்காக வந்தார். நேர்காணல் முடிந்து மேட்டுப்பாளையம் செல்வதற்காக, தொட்டிப்பாளையம் பிரிவுபேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த மகாலிங்கம், 30 என்பவர், தனது மொபைல் போனில் அந்த பெண்ணையும், அவரது நண்பரையும் படம் எடுத்துள்ளார். இது குறித்து கேட்டபோது தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.அந்த பெண், பீளமேடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தினர். மகாலிங்கத்தை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.