உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போஸ்டல் பிரீமியர் லீக்வரும் 17ம் தேதி துவக்கம்

போஸ்டல் பிரீமியர் லீக்வரும் 17ம் தேதி துவக்கம்

கோவை; மேற்கு மண்டல தபால் துறை ஊழியர்களுக்கான கிரிக்கெட் போட்டி, வரும் 17ம் தேதி, கோவை மற்றும் சேலத்தில் துவங்குகிறது.மேற்கு மண்டல தபால் துறையில், சிறப்பாக பணிபுரிந்தோருக்கு பரிசு வழங்கும் விழா, வேளாண் பல்கலையில் நடந்தது. இதில், மண்டல அளவில் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட உள்ள நிலையில், மேற்கு மண்டல போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் சரவணன், மேற்கு மண்டல இயக்குனர் அகில் நாயர் ஆகியோர், சுழற்கோப்பையை அறிமுகப்படுத்தினர்.கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், நீலகிரி, தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம் மேற்கு, சேலம் கிழக்கு, திருப்பத்துார் ஆகிய கோட்டங்கள், ஆர்.எம்.எஸ்., கோட்டம், எம்.எம்.எஸ்., கோட்டம், மேற்கு மண்டலம் என, 14 அணிகள் பங்கேற்கின்றன.கோவை, பொள்ளாச்சி, நீலகிரி, திருப்பூர், மண்டல அலுவலகம், ஆர்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., அணிகளுக்கு, கோவையில் உள்ள தமிழ்நாடு வனத்துறை அகாடமி விளையாட்டு மைதானத்திலும், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார், ஈரோடு, சேலம் ஆகிய அணிகளுக்கு சேலத்திலும், வரும் 17ம் தேதி போட்டிகள் துவங்குகின்றன. 'நாக்-அவுட்' முறையில் நடத்தப்படும் போட்டிகளின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள், டிசம்பர் 1ம் தேதி கோவையில் நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறும் அணிக்கு, சுழற்கோப்பை வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை, ஆர்.எம்.எஸ்., கோவை கோட்ட கண்காணிப்பாளர் ஜெயராஜ் பாபு மேற்கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி