உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மின் கம்பத்தை மாற்றியமைக்கணும்!

மின் கம்பத்தை மாற்றியமைக்கணும்!

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, சிக்கலாம்பாளையம் தனியார் மருத்துவமனை முன் சாய்ந்த நிலையில் இருக்கும் மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டுமென, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.கிணத்துக்கடவு, சொக்கனூர் ரோடு சிக்கலாம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனை முன், இரும்பு மின் கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது.மேலும், கம்பம் நடப்பட்ட இடத்தில் இருக்கும் கல்லும் சாய்ந்த படி உள்ளது. மேலும், அதிக காற்றுடன் மழை பெய்யும் போது மின்கம்பம் கீழே விழ வாய்ப்புள்ளது. இந்நிலையில், மருத்துவமனை மற்றும் அதன் அருகே மக்கள் அச்சத்துடன் செல்கின்றனர். எனவே, மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, இந்த மின் கம்பத்தை மாற்றியமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ