உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தலைமை ஆசிரியருக்கு பொழிந்த பாராட்டு மழை

தலைமை ஆசிரியருக்கு பொழிந்த பாராட்டு மழை

அன்னுார்: அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியருக்கு பாராட்டு விழா நடந்தது. சொக்கம்பாளையத்தில், அரசு உதவி பெறும் தேசிய வித்யாசாலை துவக்க பள்ளியில், ஐந்தாம் வகுப்பு வரை, 100 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பள்ளியில் பணிபுரிந்த தலைமை ஆசிரியர் முருகன் பணி ஓய்வு பெறுவதை முன்னிட்டு, பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது. பள்ளி செயலர் திருவேங்கடம் வரவேற்றார். தேசிய சேவா சங்கத் தலைவர் தேவராஜன் தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர்கள் புல்லானி, இருதய மரியஜோசப் ஆகியோர், தலைமை ஆசிரியர் முருகனுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர். தலைமை ஆசிரியர், பள்ளிக்கு ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கினார். மாணவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. தேசிய சேவா சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !