உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ரோட்டில் வண்டியை நிறுத்தி குப்பை சேகரிப்பதால் அவதி

 ரோட்டில் வண்டியை நிறுத்தி குப்பை சேகரிப்பதால் அவதி

கோவை: கோவை - திருச்சி ரோட்டில் செயல்படும் அரசு மருத்துவமனையில், காலை நேரத்தில் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதால், படுபிஸியாக காணப்படுகிறது. அந்நேரத்தில் வாகன போக்குவரத்தும் அதிகமாக உள்ளது. டவுன்ஹால் மற்றும் ஸ்டேட் பாங்க் ரோட்டில் இருந்தும் வாகனங்கள் வருவதால், நெருக்கடியான சூழல் ஏற்படுகிறது. மருத்துவமனை எதிரிலேயே பஸ் ஸ்டாப் உள்ளது. எந்நேரமும் மக்கள் நடமாட்டம், பஸ் போக்குவரத்து, வாகன இயக்கம் காணப்படுகிறது. நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு தேவையான பொருட்கள் விற்கும் கடைகள், ஓட்டல்கள், மருத்துவமனைக்கு எதிரே உள்ளன. வாகன போக்குவரத்து மிகுந்த நேரத்தில் உணவு கழிவு அகற்ற, மாநகராட்சியின் குப்பை சேகரிக்கும் வண்டி வருகிறது. நடுரோட்டில் வண்டியை நிறுத்தி, உணவு கழிவு சேகரிப்பதால், அவ்வழித்தடத்தில் மற்ற வாகனங்கள் கடந்து செல்ல முடியாமல் ஸ்தம்பிக்கின்றன. வணிக வளாகத்தில் உள்ள அனைத்து கடைகளில் இருந்தும், கழிவு அப்புறப்படுத்தி விட்டு, வண்டி கிளம்பிய பிறகே போக்குவரத்து சீராகிறது. தினமும் இந்த அவதி தொடர்கிறது. இதற்கு தீர்வு காண, இக்கடைகளில் சேகரமாகும் கழிவை அதிகாலையில் அல்லது போக்குவரத்து இல்லாத இரவு நேரத்தில் சேகரிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை