மேலும் செய்திகள்
பைக் திருட்டு போலீஸ் விசாரணை
20-Jan-2025
கிணத்துக்கடவு, ; கிணத்துக்கடவு, போஸ்ட் ஆபீசில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய கவுன்டர் அமைக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.கிணத்துக்கடவு, ரயில்வே ஸ்டஷனுக்கு வரும் பயணியர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கிணத்துக்கடவை சுற்றிலும் பள்ளி, கல்லூரி மற்றும் தனியார் கம்பெனிகள் இருப்பதால், வார இறுதி நாட்களில் ரயில்வே போலீஸ் ஸ்டேஷனில் அதிக அளவு பயணியர் ரயில் பயணம் மேற்கொள்கின்றனர். இதில் சிலர் டிக்கெட் முன்பதிவு செய்து பயணிக்கின்றனர்.விடுமுறை நாட்களில், சென்னை, பெங்களூரு மற்றும் சொந்த ஊர்களுக்கு செல்ல டிக்கெட் முன்பதிவு செய்ய சிரமப்படுகின்றனர். குறிப்பாக, பண்டிகை நாட்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாததால், பஸ் பயணத்தை மேற்கொள்கின்றனர்.எனவே, ரயில் பயணியர் நலன் கருதி, கிணத்துக்கடவு பகுதியில் உள்ள போஸ்ட் ஆபீசில் ரயில் டிக்கெட் முன்பதிவு கவுன்டர் அமைக்க, ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
20-Jan-2025