உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விநாயகர் சிலையை அகற்றியதால் பரபரப்பு

விநாயகர் சிலையை அகற்றியதால் பரபரப்பு

மேட்டுப்பாளையம்; காரமடை அருகே விநாயகர் சிலையை அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.கோவை மாவட்டம் காரமடை நகராட்சி 8வது வார்டுக்குட்பட்டது வடமங்கலகரை பகுதி. இங்கு 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.வடமங்கலகரை மூன்று முக்கு பகுதியில் சாலையோரம் கடந்த 2ம் தேதி அப்பகுதி மக்கள் மிகவும் சிறிய அளவில் 2 அடி உயரத்தில் ஒரு விநாயகர் சிலையை வைத்தனர். பின் விநாயகரை வழிபட்டனர். இதனிடையே, அனுமதி பெறாமல் இங்கு விநயாகர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக எழுந்த புகாரை அடுத்து, மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி., அதியமான், காரமடை இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் ஆகியோர் நேற்று மாலை சம்பவ இடத்திற்கு சென்று, அப்பகுதி மக்களிடம் விநாயகர் சிலையை அகற்ற கூறினர்; மக்கள் மறுத்தனர்.பின் போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டு, பேச்சு நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையில் காரமடை நகராட்சி அதிகாரிகள், வருவாய் துறையினர், போலீசார் பங்கேற்றனர். 'அருகில் வேறு இடத்தில் விநாயகர் சிலை வைக்க ஏற்பாடு செய்யப்படும்' என உறுதி அளித்தனர்.இதில் சமரசம் ஏற்பட விநாயகர் சிலையை பொதுமக்கள் அகற்றி, அருகில் உள்ள பட்டத்தரசி அம்மன் கோவிலுக்கு கொண்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை