உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஓடை துார்வாரவில்லை; நடவடிக்கை எடுக்குமா பொதுப்பணித்துறை?

ஓடை துார்வாரவில்லை; நடவடிக்கை எடுக்குமா பொதுப்பணித்துறை?

துார்வார வேண்டும் உடுமலை பாப்பான்குளத்தில் பாசனத்திற்காக தண்ணீர் செல்லும் ஓடை தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால், ஓடையில் குப்பை, கழிவுகள் போடப்படுகிறது. எனவே, இந்த ஓடையை துார்வார பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். - மோகன்: குப்பையை அகற்றணும் உடுமலை ஆண்டாள் சீனிவாசன் லே அவுட் பகுதியில், மழைநீர் வடிகால் பகுதியில் குப்பை நிறைந்து காணப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, குப்பையை அகற்ற நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். - சோமு: நிழற்கூரை பராமரிப்பில்லை உடுமலை காந்திநகரில் பஸ் ஸ்டாப் நிழற்கூரை உள்ளது. இது பராமரிப்பு இல்லாததால், குப்பை நிறைந்து காணப்படுகிறது. இதனால், இதை பயணியர் பயன்படுத்துவதில்லை. எனவே, நிழற் கூரையை நகராட்சியினர் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - காந்தி: மேம்பாலம் கட்டணும் உடுமலை கொழுமம் ரோட்டில், உள்ள ரயில்வே கேட் ரயில் வந்து செல்லும் போது பல முறை மூடப்படுகிறது. இதனால், அந்த ரோட்டில் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதுள்ளது. எனவே, அங்கு மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். - கந்தசாமி: பாலத்தை சீரமைக்கணும் உடுமலை அருகே மடத்துக்குளம் அமராவதி ஆற்றுப்பாலத்தில் தடுப்புச்சுவர் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, ஆற்றுப்பாலத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - முருகன்: ஆக்கிரமிப்புகளை அகற்றணும் உடுமலை உழவர்சந்தை முன், காலை நேரங்களில் தற்காலிக கடைகள் போடப்படுகின்றன. இதனால், அந்த ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, அங்கு போடப்படும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். - பாலாஜி: குப்பை எரிப்பு பொள்ளாச்சி அருகே உள்ள பணிக்கம்பட்டி ரோடு மகாலட்சுமி நகர் பகுதியில், ரோட்டோரத்தில் அதிகளவு குப்பை கொட்டி அடிக்கடி தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் ஏற்படும் புகை வாகன ஓட்டுநர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. எனவே, இங்கு குப்பை கொட்டப்படுவதை தவிர்க்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - -- புவனேந்திரன்: புதுப்பிக்கப்படுமா? கிணத்துக்கடவு புது பஸ் ஸ்டாண்டில் வைக்கப்பட்டுள்ள நுழைவுவாயில் போர்டு துருப்பிடித்து இருப்பதால், அதில் உள்ள எழுத்துக்கள் அழிந்துள்ளது. இதை பேரூராட்சி நிர்வாகத்தினர் கவனித்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - கோகுல்: ஆக்கிரமிப்பால் இடையூறு பொள்ளாச்சி, கடைவீதி வெற்றிலை கடை சந்து பகுதியில் ரோட்டோரம் அதிக அளவில் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் வைக்கப்பட்டுள்ளதால், அவ்வழியில் செல்லும் வாகன ஓட்டுநர்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது. எனவே, நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் ரோட்டோரம் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். -- டேனியல்: பாதையில் புதர் கிணத்துக்கடவு ஒன்றிய அலுவலக வளாகத்தில் இருந்து, புது பஸ் ஸ்டாண்ட் செல்லும் சர்வீஸ் ரோடு அருகே மக்கள் வந்து செல்ல அமைக்கப்பட்ட மண்பாதை, தற்போது செடிகள் முளைத்து புதராக காணப்படுகிறது. இதனால், மக்கள் பலர் அச்சத்துடன் சர்வீஸ் ரோட்டில் செல்கின்றனர். எனவே, இந்த பாதையில் உள்ள செடிகளை அகற்ற வேண்டும். -- தினேஷ்: சிதறி விழும் குப்பை பொள்ளாச்சி, பாலக்காடு ரோட்டில் நகராட்சி நிர்வாகம் சார்பில் குப்பையை மூட்டைகளாக வாகனத்தில் அளவுக்கு அதிகமாக ஏற்றி செல்வதால் ரோட்டில் ஆங்காங்கே விழுகிறது. இதனால், துர்நாற்றம் வீசுவதுடன் வாகன ஓட்டுனர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதை நகராட்சி நிர்வாகத்தினர் கவனித்து சரி செய்ய வேண்டும். -- தினேஷ்:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை