உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரூ.1.50 கோடி வணிக வளாகம் இன்னும் பயன்பாட்டுக்கு வரலை

ரூ.1.50 கோடி வணிக வளாகம் இன்னும் பயன்பாட்டுக்கு வரலை

கோவை; ரூ.1.50 கோடியில் கோவை பட்டேல் சாலையில் கட்டப்பட்ட வணிக வளாகம், ஐந்து மாதங்களாகியும் இன்னும் திறக்கப்படாமல் இருக்கிறது.கோவை மாநகராட்சி, 67வது வார்டு பட்டேல் சாலையில், மாநகராட்சி சார்பில் ரூ.1.50 கோடி செலவழித்து, புதிதாக வணிக வளாகம் கட்டப்பட்டிருக்கிறது. ஐந்து சிறிய கடைகள், இரண்டு பெரிய கடைகள் வீதம் மொத்தம் ஏழு கடைகள் கட்டப்பட்டு உள்ளன.கடந்த பிப்., 20ல் நகராட்சித்துறை அமைச்சர் நேரு தலைமையில் நடந்த விழாவில், இந்த வணிக வளாகம் திறக்கப்பட்டது. ஐந்து மாதங்களாகியும் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை; அக்கடைகள் திறக்கப்படாமல் இருக்கின்றன.இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, 'ஏலம் விடப்பட்டு, ஆறு கடைகள் ஒப்பந்ததாரர்களிடம் வழங்கப்பட்டு விட்டது. ஒரே ஒரு கடை மட்டும் இன்னும் ஏலம் போகவில்லை' என்றனர்.கடைகள் எதுவுமே இன்னும் திறக்கப்படவில்லை என்கிற தகவல் கூட அறியாமல் மாநகராட்சி அதிகாரிகள் இருக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை