உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நிழலுக்கு மரங்களும் இல்லை நிழற்குடையும் இல்லை

நிழலுக்கு மரங்களும் இல்லை நிழற்குடையும் இல்லை

கோவை: சிறுவாணி ரோடு, தண்ணீர்ப்பந்தல் ஜங்ஷன் பஸ் ஸ்டாப்பில் நிழற்குடை இல்லாததால், பஸ்சுக்கு காத்திருக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உட்பட அனைவரும் சிரமப்படுகின்றனர். அப்பகுதி மக்கள் திரண்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். குமாரசாமி என்பவர் கூறுகையில், ‘‘ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் நிழற்குடை இல்லை. சரி, மரங்களின் நிழலிலாவது ஒதுங்கலாம் என்றால், ரோட்டை அகலப்படுத்துவதற்காக, பஸ் ஸ்டாப் பகுதியில் இருந்த மரங்களையும் வெட்டி விட்டார்கள். தென்கரை பேரூராட்சி நிர்வாகம் பஸ் ஸ்டாப்களில் நிழற்குடை அமைக்க வேண்டும்,’’ என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அப்பாவி
அக் 14, 2026 05:51

ஆளுக்கு பத்து ரூவா வசூல் பண்ணி இன்னிக்கி மரக்கன்று நடுங்க. மனு குடுத்து நாசமா போகாதீங்க.