மேலும் செய்திகள்
லாட்டரி சீட்டு விற்பனை இரண்டு பேர் கைது
27-Jan-2025
கோவை; கோவை, உப்பிலிப்பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி, 73. இவர், வீட்டின் ஒரு அறையில் பழைய மோட்டார், பைப்புகளை வைத்துள்ளார். இவற்றை இரண்டு வாலிபர்கள் திருட முயற்சித்தனர். பக்கத்து வீட்டுக்காரர்கள் வருவதை பார்த்து இருவரும் தப்பி ஓடினர். இந்நிலையில் அந்த வாலிபர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு ராமசாமியின் வீட்டிற்குள் புகுந்தனர். பக்கத்து வீட்டுக்காரர் உதவியுடன் ராமசாமி அங்கு பதுங்கியிருந்தவர்களை மடக்கி பிடித்து சிங்காநல்லுார் போலீசில் ஒப்படைத்தார்.அவர்கள் மசக்காளிபாளையத்தை சேர்ந்த சபரி, 19, கவுதம், 19 என்பது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
27-Jan-2025