மேலும் செய்திகள்
இ-சிகரெட், லேப்டாப் பறிமுதல்
4 hour(s) ago
மாநில கூடைப்பந்து போட்டி; வீரர், வீராங்கனை சுறுசுறுப்பு
4 hour(s) ago
கடைவீதிகளில் மக்கள் கூட்டம்
4 hour(s) ago
லிங்கனுாரில் குறுகிய தரைப்பாலத்தில் தடுமாற்றம்!
4 hour(s) ago
கோவை;கன மழை எதிர்பார்க்கப்படும் நிலையில் குளங்களுடன் இணையும் நீர் வழித்தடங்களில் தங்கு தடையின்றி தண்ணீர் செல்ல ஏதுவாக, துார்வாரும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.பெயரளவுக்கு இந்த பணிகளை மேற்கொள்ளாமல், போர்க்கால அடிப்படையில் தடைகளை அகற்ற மாநகராட்சி முன்வர வேண்டும்.கோவை மாநகராட்சி வசம் நரசாம்பதி, கிருஷ்ணாம்பதி, குமாரசாமி குளம் உட்பட ஒன்பது குளங்கள் உள்ளன.மழை பொய்த்ததால் தற்போது நரசாம்பதி குளத்தில், 30 சதவீதம், கிருஷ்ணாம்பதி, செல்வாம்பதி, குமாரசாமி, செல்வசிந்தா மணி, வாலாங்குளம், குறிச்சி குளங்களில், 50 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. சிங்காநல்லுார் குளம், உக்கடம் பெரியகுளம் உள்ளிட்டவற்றில், 70 சதவீதத்துக்கும் குறைவாக தண்ணீர் உள்ளது.உக்குளம், பேரூர் பெரியகுளத்தில் தலா, 30, கங்கநாராயணா சமுத்திரம், சொட்டையாண்டி குட்டையில் தலா, 10 சதவீதமேஉள்ளது. மழை பெய்தால் மட்டுமே குடிநீர், விவசாயத்துக்கான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யமுடியும் என்ற நிலை உள்ளது.இந்நிலையில், கோவை, திருப்பூர், தேனி உட்பட பல்வேறு மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.குளங்களுக்கு செல்லும் நீர் வழித்தடங்களில் பிளாஸ்டிக், முட்புதர்கள் காரணமாக, மழை பெய்யும் பட்சத்தில் தண்ணீர் செல்வதில் தடை ஏற்படும்.தாழ்வான இடங்களில் உள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகும் வாய்ப்புள்ளது. மழைக்கு முன்பே குளங்களை துார்வாருவதுடன், நீர் வழித்தடங்களையும் பராமரிக்க குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் உட்பட, பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இந்நிலையில், திருச்சி ரோடு வழியாக, சிங்காநல்லுார் குளத்துக்கு செல்லும் சங்கனுார் கிளை வாய்க்கால் உள்ளிட்டவற்றை, துார்வாரும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், தண்ணீர் தடையின்றி பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'கிருஷ்ணாம்பதி குளம், வெள்ளலுார் வாய்க்கால் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் சமீபத்தில் ஆய்வு செய்தார். அப்போது, நீர்வழிப் பாதைகளில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை முழுமையாக அகற்றிட உத்தரவிட்டார். அதன்படி, குளங்களுக்கு செல்லும் நீர் வழித்தடங்கள்துார்வாரும் பணி நடந்து வருகிறது' என்றனர்.வெயில் நின்று, மழை வலுக்கும் இந்த இடைவெளி இனி வாய்க்காது. அதற்குள், அனைத்து நீர்வழித்தடைகளையும் போர்க்கால அடிப்படையில், மாநகராட்சி நிர்வாகம் அகற்ற வேண்டும்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago