உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தீரன் சின்னமலை நினைவு தின நிகழ்ச்சி

தீரன் சின்னமலை நினைவு தின நிகழ்ச்சி

அன்னுார்;அன்னுார் வட்டாரத்தில், தீரன் சின்னமலை நினைவு தின நிகழ்ச்சி நேற்று நடந்தது. அன்னுார், சத்தி ரோட்டில் உள்ள, கொங்கு வேளாள கவுண்டர்கள் சங்கத்தில், தீரன் சின்னமலையின் 220வது நினைவு தின நிகழ்ச்சி நேற்று நடந்தது. சுதந்திரப் போராட்டத்தில் தீரன் சின்னமலையின் பங்கு குறித்து சங்க நிர்வாகிகள் பேசினர். அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அன்னுார், கைகாட்டியில், அ.தி.மு.க., சார்பில், தீரன் சின்னமலை நினைவு தின நிகழ்ச்சி நடந்தது. ஒன்றிய செயலாளர்கள் சாய் செந்தில், சரவணன், மாணவரணி துணைத் தலைவர் நவீன் உள்பட பலர் தீரன் சின்னமலையின் உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். ஒன்றிய, நகர நிர்வாகிகள் பங்கேற்றனர். காளப்பட்டியில் நடந்த நிகழ்ச்சியில் கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., அருண்குமார், பகுதி செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினர். சூலூர் கண்ணம்பாளையம் பேரூராட்சி தியாகிகள் கலையரங்கில், தி.மு.க., சார்பில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமையில் நிர்வாகிகள், தீரன் சின்னமலையின் திருவுருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பீடம் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் குமரவேல், முன்னாள் பா.ஜ.,ஒன்றிய செயலாளர் அசோக்குமார், ஞான பிரகாசம் உள்ளிட்ட பலர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். சோமனூரில் பா.ஜ., நகர தலைவர் பிரகாஷ் தலைமையில் நிர்வாகிகள், தீரன் சின்னமலை திருவுருவ படத்துக்கு அஞ்சலி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ