உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாகாளியம்மன் கோவில் சுவாமிக்கு தீர்த்த வழிபாடு

மாகாளியம்மன் கோவில் சுவாமிக்கு தீர்த்த வழிபாடு

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, கோவில்பாளையம் மாகாளியம்மன் மதுரைவீரன் கோவிலில், சித்திரைத் திருவிழா, கடந்த, 29ம் தேதி துவங்கியது. அன்று, காலை, 5:00 மணிக்கு கப்பளாங்கரை பரமசிவம் கோவிலுக்கு தீர்த்தல் எடுக்க புறப்படுதல், மாலை, 7:30 மணிக்கு சக்திகும்பஸ்தான நிகழ்ச்சி நடந்தது.நேற்று முன்தினம், காலை, 7:00 மணிக்கு, முளைப்பாரி மற்றும் மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, மாலை, 3:00 மணிக்கு உருவாரம், பூவோடு எடுத்தல், இரவு, 8:00 மணிக்கு சக்தி கங்கை செல்லுதல் நடந்தன. இன்று, காலை, 8:00 மணிக்கு, மஞ்சள்நீராடல், சப்பரம் எடுத்தல், மதியம், 12:00 மணிக்கு அபிேஷக பூஜையுடன் விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை