யுனைடெட் சிட்டி அறிமுகம்; விரும்பும் வசதிகள் ஏராளம்
கோவை; கே.ஜி., குழுமத்தின் ஒரு அங்கமான 'டவுன் அண்ட் சிட்டி டெவலப்பர்ஸ்' கட்டுமான நிறுவனம், கோவை பீளமேடு பகுதியில் உள்ள எல்லைத் தோட்டம் சாலையில், 'யுனைடெட் சிட்டி' என்ற புதிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், 1 பி.எச்.கே., 2 பி.எச்.கே., 3 பி.எச்.கே., குடியிருப்பு என அமைந்துள்ளது.இது, கோவையில், டவுன் அண்ட் சிட்டி டெவலப்பர்ஸின் 18வது குடியிருப்பு திட்டமாகும். தேவைகளுக்கேற்ப, பல்வேறு வகையான குடியிருப்பு வசதிகளை வழங்குகிறது. நீண்டகால மதிப்பு மற்றும் வாழ்க்கை முறை வசதிகளுக்காக வீடு வாங்குவோருக்கும், முதலீட்டாளர்களுக்கும் சிறந்த தேர்வாக அமைகிறது.பள்ளிகள், கல்லுாரிகள், மருத்துவமனைகள் மற்றும் வணிக மையங்கள் போன்ற முக்கிய வசதிகளை எளிதில் அணுகக் கூடிய வகையில் திட்டம் அமைந்துள்ளது. குடியிருப்பாளர்களின் பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமரா வசதி, மோஷன் சென்சார் விளக்குகள், அதிநவீன சுத்திகரிப்பு நிலையம் உட்பட பல வசதிகளுடன் அமைந்துள்ளது.இதற்கான நிகழ்ச்சியில், டவுன் அண்ட் சிட்டி டெவலப்பர்ஸ் இணை நிறுவனர் சஞ்சனா விஜயகுமார், விற்பனை பிரிவு துணை தலைவர் சுரேஷ்குமார், மார்க்கெட்டிங் மேலாளர் ஜோஷ்வா ஆகியோர் பங்கேற்றனர்.