உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆவாரம்குளத்தில் ஒரே நாளில் 300 மரக்கன்றுகள் நட்டனர் சார் படம் உண்டு

ஆவாரம்குளத்தில் ஒரே நாளில் 300 மரக்கன்றுகள் நட்டனர் சார் படம் உண்டு

அன்னுார்:ஆவாரம்குளத்தில் ஒரே நாளில் 300 மரக்கன்றுகள் நடப்பட்டன.கரியாம்பாளையம் ஊராட்சி, எல்லப்பாளையம் பிரிவில், 85 ஏக்கர் பரப்பளவு உள்ள ஆவாரம் குளம் உள்ளது. இக்குளத்தில் கவுசிகா நீர் கரங்கள் மற்றும் ஆவாரம் குளம் பாதுகாப்பு அமைப்பு சார்பில் ஆறு மாதங்களாக சீரமைப்பு பணி நடந்து வருகிறது.இந்நிலையில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நேற்று முன்தினம் மெகா கிரேன் நிறுவனத்தாரும், தன்னார்வலர்களும் இணைந்து, மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டனர். இதில் நாவல், இலுப்பை, புங்கன், கொன்றை, பாதானி உள்பட எட்டு வகையைச் சேர்ந்த 300 மரக்கன்றுகள் நடப்பட்டன.மேலும் நடப்பட்ட இடத்தைச் சுற்றி பாத்தி அமைக்கும் பணி, களை அகற்றும் பணி செய்யப்பட்டது. ஏற்கனவே நடப்பட்ட மரக்கன்றுகளைச் சுற்றி உள்ள களைகளை அகற்றும் பணியும் நடந்தது. இதில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மணி மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை