/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் சார் படம் உண்டு. மெயில் அனுப்பி உள்ளேன்
முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் சார் படம் உண்டு. மெயில் அனுப்பி உள்ளேன்
அன்னுார்,: முத்துமாரியம்மன் கோவில், கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.ஆம்போதி ஊராட்சி, செல்லப்பம்பாளையம், சாலையூரில், மகா கணபதி, பாலமுருகன், மகா முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு வர்ணம் தீட்டப்பட்டது.கும்பாபிஷேக விழா வேள்வி பூஜை நேற்று முன்தினம் நடந்தது. காலையில் பவானி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. மாலையில் முதல் கால வேள்வி பூஜையும், இரவு எண் வகை மருந்து சாத்துதலும் நடந்தது. நேற்று காலை கணபதி, பாலமுருகன் மற்றும் முத்துமாரியம்மனுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.இதையடுத்து, மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று முதல் மண்டல பூஜை நடைபெறுகிறது.