உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அருகில் எச்சரிக்கை பலகை; ஆனாலும் குவியுது குப்பை

அருகில் எச்சரிக்கை பலகை; ஆனாலும் குவியுது குப்பை

விழும் நிலையில் மரங்கள் பீளமேடு, காந்தி மாநகரில், குடியிருப்புகளுக்கு மத்தியில், விழும் நிலையில் உள்ள மரங்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். - மணி: சாக்கடை கால்வாயை துார் வாரணும் மாநகராட்சி, 24வது வார்டு, தண்ணீர் பந்தல் - விளாங்குறிச்சி ரோட்டில், சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இக்கால்வாயை துார்வார வேண்டும். - பாலு: எதற்கு வைத்தார்களோ மாநகராட்சி, 24வது வார்டு குமுதம் நகர் அருகில் உள்ள என்ஆர்ஐ கார்டனில், மாநகராட்சி வைத்துள்ள எச்சரிக்கை பலகை அருகிலேயே குப்பை குவிக்கப்படுகிறது. இந்த பலகை வைக்கப்பட்டுள்ள இடமும், பராமரிப்பின்றி முட்புதராக மாறிவிட்டது. - கார்த்திக்: போக்குவரத்து போலீசார் வேண்டும் அவிநாசி ரோடு, பீளமேடு பஸ் ஸ்டாப், சென்ட்ரல் வங்கி அருகில், சாலையை கடக்க முடியாமல், மக்கள் அவதிப்படுகின்றனர். இப்பகுதியில், அடிக்கடி விபத்து ஏற்படுவதால், போக்குவரத்து போலீசாரை பணியமர்த்தி, மக்கள் சாலையை கடக்க உதவ வேண்டும். - அஸ்விக்: சாலையை செப்பனிடணும் வெள்ளலுார், இடையர்பாளையம் - எல் அண்டு டி பை-பாஸ் ரோட்டுக்கு செல்லும் ரோடு, குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். இச்சாலையை செப்பனிட வேண்டும். - பெரியசாமி: சுகாதார சீர்கேடு மாநகராட்சி, 88வது வார்டு, குனியமுத்துார், அரசு அலுவலர்கள் குடியிருப்பு பகுதி அருகே உள்ள காலியிடம் பராமரிப்பின்றி உள்ளது. குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் நீர் காலியிடத்தில் தேங்கி குளம் போல் மாறியுள்ளது. கொசு உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. - சதீஷ்: கால்நடைகளால் இடையூறு மாநகராட்சி, 89 வது வார்டு, சுண்டக்காமுத்துார் - சிறுவாணி ரோட்டில், தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. இத்துடன் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். சாலையில் சுற்றித்திரியும் நாய்களையும், கால்நடைகளையும் பிடித்துச் செல்ல வேண்டும். - துரை: * சோமையம்பாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட, கஸ்துாரி நாயக்கன்பாளையத்தில் சாலையில் சுற்றித்திரியும் குதிரைகளால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். - குருசாமி: குடிநீர் வசதி இல்லை காந்தி பார்க்கில் உள்ள பூங்கா நடைபாதை அருகே, மக்கள் பயன்பாட்டுக்காக குடிநீர் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதமாக இந்த இயந்திரம் பழுதடைந்துள்ளது; குடிநீர் வருவதில்லை. விளையாட வரும் குழந்தைகள் நடைபயிற்சி செய்வோர் அவதிப்படுகின்றனர். - ஆறுச்சாமி:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ