யு டர்ன் பகுதியில் அறிவிப்பு இல்லை
நெகமம்; பொள்ளாச்சி -- பல்லடம் ரோட்டில், 'யு டர்ன்' அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் அறிவிப்பு இல்லாததால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.பொள்ளாச்சி --- பல்லடம் ரோட்டில், வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. தற்போது, இந்த ரோடு அகலப்படுத்தும் பணிகள் நடக்கிறது. இதில், நெகமம் அருகே ஆங்காங்கே வாகனங்கள் திரும்பி செல்ல வசதியாக, 'யு டர்ன்' பகுதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், அப்பகுதிகளில் அறிவிப்பு இல்லாததால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.மேலும், இரவு நேரத்தில் ரோட்டை கடக்கவும், வாகனங்கள் திரும்பிச் செல்லவும் 'யு டர்ன்' பகுதியில் திரும்பினால், விபத்து ஏற்படும் வகையில் உள்ளது. எனவே, ரோடு பணிகள் முழுமையடையும் வரை, இப்பகுதிகளில் தற்காலிகமாக அறிவிப்பாவது அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தி உள்ளனர்.