ஆத்திச்சூடிக்கு நிகரில்லை
கோவை, : உயர் கல்வித் துறை மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைந்து நடத்தும், 'மாபெரும் தமிழ்க்கனவு - 2025' நிகழ்ச்சி, பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது. கோவை கலெக்டர், சொற்பொழிவாளர் பாரதி கிருஷ்ணகுமார் உரையாற்றினர். கோவை மண்டலத்தை சேர்ந்த, பத்து கல்லூரிகளின் மாணவர்கள் பங்கேற்றனர். பாரதி கிருஷ்ணகுமார் பேசுகையில், ''2 ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் பேசப்படும், ஆறு மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று. ஆத்திச்சூடிக்கு நிகரான இலக்கியம் உலகத்தில் இல்லை,'' என்றார். நிகழ்ச்சியில், 'தமிழ் பெருமிதம்' ஏட்டிலுள்ள துணுக்குகளை வாசித்து சிறப்பாக விளக்கிய மாணவர்களுக்கும், தரமான கேள்விகளை எழுப்பிய மாணவர்களுக்கும் பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.