உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சுரங்கப்பாலத்தில் வெளிச்சமில்லை; வாகன ஓட்டுநர்கள் திக்... திக்...

சுரங்கப்பாலத்தில் வெளிச்சமில்லை; வாகன ஓட்டுநர்கள் திக்... திக்...

பொள்ளாச்சி; பொள்ளாச்சி சி.டி.சி., காலனி செல்லும் ரோட்டில் உள்ள, சுரங்க பாலம் இருளாக இருப்பதால் வாகன ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர்.பொள்ளாச்சி நகரில், போக்குவரத்து நெரிசல் உள்ளது. இதற்காக ரோடு விரிவாக்கம், பாலங்கள் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதில், ரயில்வே அகலப்பாதையாக மாற்றிய போது, சி.டி.சி., காலனியில் இருந்து ரயில்வே ஸ்டேஷன் செல்வதற்காக சுரங்கப்பாலம் அமைக்கப்பட்டது.இந்த பாலம் வழியாக, சி.டி.சி., காலனி, ராம் நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதி மக்கள் கோட்டூர் ரோடு மற்றும் ரயில்வே ஸ்டேஷன் செல்லவும் பயன்படுத்தி வருகின்றனர்.இரவு நேரங்களில் மட்டுமல்லாமல், பகலிலும் இந்த பாலத்தை கடக்கும் வாகன ஓட்டுநர்கள் பதட்டம் மற்றும் அச்சத்துடன் கடக்கும் சூழலே உள்ளது.பகல் நேரத்திலும், இந்த பாலம் இருளாக இருப்பதால் வாகன ஓட்டுநர்கள், வாகன முகப்பு விளக்கை ஒளிர விட்டு செல்ல வேண்டிய சூழல் உள்ளது. சில நேரங்களில், வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது.இரவு நேரங்களில் அதிகளவு இருட்டாக இருப்பதால், இவ்வழியை பயன்படுத்த மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.இங்கு வெளிச்சத்துக்காக அமைக்கப்பட்ட லைட்டுகள் பராமரிப்பின்றி உள்ளன.சுரங்க பாலத்தில் மின் விளக்குகளை சிலர் உடைத்தும், திருடிச் செல்வதாகவும் கூறப்படுகிறது. இதற்குரிய தீர்வு காணவும், பாலத்தில் இருள் அகற்றி வெளிச்சம் ஏற்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என, வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ