மேலும் செய்திகள்
'சில்'லென்று மாறுது வானிலை
15-Nov-2024
பொள்ளாச்சி; கோவை மாவட்டத்தில், வரும் 17ம் தேதி வரை வடகிழக்குப் பருவமழை, லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆனைமலை, அன்னுார், காரமடை, கிணத்துக்கடவு, மதுக்கரை, பொள்ளாச்சி தெற்கு மற்றும் வடக்கு, சுல்தான்பேட்டை பகுதிகளில், சராசரியாக 7 முதல் 9 மி.மீ, மழை பதிவாகலாம்.இன்று, 15ம் தேதி, குறைந்தது 20 மி.மீ., முதல் அதிகபட்சம் 24 மி.மீ., வரை மழை பெய்யலாம். 16ம் தேதி, 18 முதல் 22 மி.மீ., மழை; 17ம் தேதி, 18 முதல் 25 மி.மீ., மழையும் எதிர்பார்க்கப்படுகிறது என, வேளாண் காலநிலை மையம் தெரிவித்துள்ளது.
15-Nov-2024