மேலும் செய்திகள்
4வது திட்ட குடிநீர் இன்று நிறுத்தம்
30-Oct-2025
கோவை: கோவை மாநகர மக்களுக்கு பில்லுார் திட்டத்தில், மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து குடிநீர் எடுத்து சப்ளை செய்யப்படுகிறது. பில்லுார் அணையின் மேற்புறப்பகுதியில் குந்தா அணையில் மின் வாரியம் சார்பில் பராமரிப்பு பணி நடந்து வருகிறது. இதன் காரணமாக, வடவள்ளி - கவுண்டம்பாளையம் - வீரகேரளம் கூட்டுக்குடிநீர் திட்டங்கள், பில்லுார்-2, பில்லுார்-3 ஆகிய திட்டங்களின் கீழ் பயன் பெற்று வரும் மக்களுக்கு சனிக்கிழமை (8ம் தேதி) முதல் குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டது. இரு நாட்களில் பராமரிப்பு பணி முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அப்பணி இன்னும் முடியாததால், இன்றும் (11ம் தேதி), நாளையும் (12ம் தேதி) குடிநீர் சப்ளை இருக்காது என்றும், அப்பகுதியை சேர்ந்த மக்கள், மற்ற ஆதாரங்கள் மூலம் கிடைக்கும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், மாநகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
30-Oct-2025