உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  செம்மொழி பூங்கா பராமரிப்பில் சுணக்கம் இருக்காது: கமிஷனர்

 செம்மொழி பூங்கா பராமரிப்பில் சுணக்கம் இருக்காது: கமிஷனர்

காந்திபுரம்: செம்மொழி பூங்காவை காலை 10 மணி முதல் பொதுமக்கள் பார்வையிடலாம். நாளை முதல் காலை 6 முதல் இரவு 7 மணி வரை செயல்படும். பெரியவர்களுக்கு ரூ.15, பத்து வயதுக்கு உட்பட்ட சிறியவர்களுக்கு ரூ.5 என நுழைவு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், ''குடிநீர் வினி யோகம், செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவது, கட்டடங்களில் பராமரிப்பு பணி என ஒவ்வொரு பணிக்கும் தனித்தனி ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இரவு, பகல் என இரண்டு ஷிப்ட்டுகளாக ஊழியர்கள் பணிபுரிவர். மறுநாள் காலை மக்கள் வருவதற்கு முன், சுத்தம் செய்யப்படும். இரண்டு தோட்டக்கலை அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இரண்டு தோட்டக்கலை அலுவலர் பணியிடம் தோற்றுவிக்க அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம். பராமரிப்பில் எவ்வித சுணக்கமும் ஏற்படாது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை