உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சொல்லித்தர யாருமில்லை... கில்லியாக வாய்ப்பே இல்லை

சொல்லித்தர யாருமில்லை... கில்லியாக வாய்ப்பே இல்லை

கோவை; கோவை நேரு ஸ்டேடியத்தில், பல்வேறு விளையாட்டுகளுக்கு பயிற்சியாளர்கள் இல்லாமல், வீரர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். விரைவில் துவங்கவுள்ள, முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில், கோவை வீரர், வீராங்கனைகள் ஜொலிப்பது கேள்விக்குரியதாகியுள்ளதால், துணை முதல்வர் உடனடியாக கவனிக்க வேண்டும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், கோவை நேரு ஸ்டேடியத்தில் மாணவர் விடுதி உள்ளது. இங்கு தங்கி பயிலும் மாணவர்கள் மற்றும் அரசு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தினமும் விளையாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. காலை மற்றும் மாலை வேளையில் நடக்கும் பயிற்சியில், ஏராளமான வீரர்கள் பயிற்சி பெற்று வந்தனர். தற்போது கால்பந்து, தடகளம், ஜிம்னாஸ்டிக் போன்ற விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்க ஆளில்லை. வீரர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஹாக்கி விளையாட்டுக்கு பல ஆண்டுகளாகவே பயிற்சியாளர் இல்லை. சமீபத்தில் கால்பந்து பயிற்சியாளர் மாற்றுப் பணி கிடைத்து சென்று விட்டார். ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், இரண்டு தடகள பயிற்சியாளர்கள் மற்ற வீரர்களுக்கு பயிற்சி அளித்து வந்தனர். இவர்களில், மாணவிகளுக்கான பெண் பயிற்சியாளர் பிரசவ கால விடுப்பில் சென்று விட, மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வந்த மற்றொரு தடகள பயிற்சியாளர் திருச்சிக்கு மாறுதல் பெற்றுச் சென்று விட்டார். விரைவில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் துவங்க உள்ள நிலையில், தமிழக வீரர்கள் எப்படி போட்டியில் வெற்றி பெற முடியும் என்று, பெற்றோர்களும் விளையாட்டு ஆர்வலர்களும் கேள்வி எழுப்புகின்றனர். 'தலைமை அலுவலகத்துக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது' மாவட்ட விளையாட்டு அலுவலர் புவனேஸ்வரி கூறுகையில், ''கால்பந்து விளையாட்டுக்கு ஒரு பயிற்சியாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு, சென்னைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஹாக்கி, ஜிம்னாஸ்டிக் மற்றும் தடகள விளையாட்டுகளுக்கு பயிற்சியாளர்கள் இல்லாதது குறித்து, தலைமை அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் புதிய பயிற்சியாளர்கள் நியமிக்கப்படுவர்,'' என்றார்.

'தலைமை அலுவலகத்துக்கு

தகவல் அளிக்கப்பட்டுள்ளது'

மாவட்ட விளையாட்டு அலுவலர் புவனேஸ்வரி கூறுகையில், ''கால்பந்து விளையாட்டுக்கு ஒரு பயிற்சியாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு, சென்னைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஹாக்கி, ஜிம்னாஸ்டிக் மற்றும் தடகள விளையாட்டுகளுக்கு பயிற்சியாளர்கள் இல்லாதது குறித்து, தலைமை அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் புதிய பயிற்சியாளர்கள் நியமிக்கப்படுவர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை