மூன்றாவது டிவிஷன் கிரிக்கெட்; மூன்று விக்கெட் வீழ்த்திய மூவர்
கோவை: கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம்(சி.டி.சி.ஏ.) சார்பில் மூன்றாவது டிவிஷன் போட்டி பி.எஸ்.ஜி. ஐ.எம்.எஸ். சூர்யபாலா உள்ளிட்ட மைதானங்களில் நடக்கிறது. கொங்கு கிரிக்கெட் கிளப் அணியும், கே.எம்.பி. கிரிக்கெட் கிளப் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த கொங்கு கிரிக்கெட் கிளப் அணி, 47.5 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 172 ரன் எடுத்தது. வீரர்கள் செந்தில், 41 ரன், சஞ்சீவ், 38 ரன் எடுத்தனர். எதிரணி வீரர்கள் தருண் ஆதித்யா, ரோகித், பிரபாகரன் ஆகியோர் தலா மூன்று விக்கெட்கள் எடுத்தனர். அடுத்து விளையாடிய, கே.எம்.பி. அணியினர், 41.2 ஓவரில் நான்கு விக்கெட் இழப்புக்கு, 173 ரன் எடுத்தனர். வீரர்கள் வெங்கட கிருஷ்ணா, 64 ரன், சேம்சன் கில்பர்ட், 35 ரன் எடுத்தனர். போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.