உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இது புலிநகமாக்கும்... வலைதளத்தில் தம்பட்டம் அடித்தவர் கைது

இது புலிநகமாக்கும்... வலைதளத்தில் தம்பட்டம் அடித்தவர் கைது

கோவை : புலி நகத்துடன் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட கோவையைச் சேர்ந்த நபரை வனத்துறையினர் கைது செய்தனர்.கோவை, ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் சமூக வலை தளத்தில் வெளியான வீடியோ ஒன்றில், தான் அணிந்திருப்பது புலி நகம் எனவும், ஆந்திராவில் இருந்து வாங்கியதாகவும் பேசியிருந்தார்.இதையடுத்து, வனத்துறையினர் அவரது வீட்டில் சோதனை செய்தபோது, மான் கொம்புகள் இருந்தது தெரியவந்தது. சோதனையின்போது, அந்நபர் வீட்டில் இல்லாத நிலையில், நேற்று வனத்துறை முன் ஆஜரானார்.அவரிடம் இருந்து புலி நகம் பதித்த சங்கிலி பெறப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகம், நீதிமன்றம் வாயிலாக, சென்னை வண்டலூரில் உள்ள உயர்நிலை வன உயிரின பாதுகாப்பு நிறுவனத்துக்கு (ஏ.ஐ.டபிள்யூ.சி.,) பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.அங்கிருந்து பெறப்படும் அறிக்கையைத் தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ