உள்ளூர் செய்திகள்

கள் விற்றவர்கள் கைது

நெகமம் : நெகமம் பகுதியில், 'கள்' விற்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.கிணத்துக்கடவு அருகே நெகமம் பகுதியில் சட்டவிரோதமாக கள் இறக்கி விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது,இதைத்தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், சாலைப்புதுார் பகுதியில் சின்னத்தம்பி, 52, விவசாயி என்பவரிடமிருந்து, 5 லிட்டர் கள் மற்றும் ஆண்டிபாளையத்தைச் சேர்ந்த நாச்சிமுத்து, 44, விவசாயி என்பவரிடமிருந்து. 5 லிட்டர் கள் என மொத்தம், 10 லிட்டர் கள்ளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், கள் விற்ற இவர்களை கைது செய்து, வழக்கு பதிந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ