உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கல்லுாரி மாணவரை காரில் ஏற்றிச்சென்று தாக்கியவர்கள் கைது

கல்லுாரி மாணவரை காரில் ஏற்றிச்சென்று தாக்கியவர்கள் கைது

போத்தனூர்; கோவை, பேரூர் அடுத்த பச்சாபாளையம் ஆண்டி கவுண்டர் வீதியை சேர்ந்தவர் சஞ்சய், 21, தனியார் கல்லூரி இரண்டாமாண்டு மாணவர். இவர் கல்லூரி மாணவி ஒருவருடன் பழகி வந்தார்.இந்நிலையில் கடந்த, 4ம் தேதி இவர் கல்லூரி எதிரே உள்ள, பேக்கரி முன் நின்றிருந்தார். அங்கு பைக்கில் வந்த, இவருக்கு அறிமுகமான, கோவை, மரக்கடை, திருமால் வீதியை சேர்ந்த முஹமது பாஷித், 21 என்பவர் சஞ்சயை பைக்கில் ஏறுமாறு கூறியுள்ளார்.சஞ்சய் பைக்கில் ஏறவும், மேலும் ஒருவர் உடன் ஏறியுள்ளார். பாலக்காடு சாலைக்கு சென்ற பைக், அங்கு அங்கு நின்றிருந்த ஒரு கார் அருகே நின்றது. காரில் சஞ்சயை வலுக்கட்டாயமாக ஏற்றினர். அங்கிருந்து, லட்சுமி நரசிம்மர் கோவில் அருகேயுள்ள, பாழடைந்த வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.அவ்வீட்டினுள் சிலர் இருந்தனர். அங்கு வைத்து சஞ்சயை திட்டி, பீர் பாட்டில் மற்றும் கட்டையால் தாக்கினர். தொடர்ந்து, மற்றொருவரை வரவழைத்த முஹமது பாஷித், சஞ்சயை காரில் ஏற்றிய அதே இடத்தில் இறக்கிவிட செய்தார்.சஞ்சய், சம்பவம் குறித்து தனது தந்தைக்கு தகவல் கூறினார்.தொடர்ந்து, அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். அவரது புகாரில், குனியமுத்தூர் போலீசார் விசாரித்து முஹமது பாஷித் மற்றும் உக்கடம், ஜி.எம்.நகரை சேர்ந்த முஹமது சாஜித் ஆகியோரை கைது செய்தனர். மேலும் எட்டு பேரை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ