உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 23 கன்று குட்டிகளை ஒரே சரக்கு ஆட்டோவில் ஏற்றியவர்கள் கைது

23 கன்று குட்டிகளை ஒரே சரக்கு ஆட்டோவில் ஏற்றியவர்கள் கைது

கோவை;23 கன்று குட்டிகளை, ஒரே சரக்கு ஆட்டோவில் ஏற்றி வந்த மூவரை போலீசார் கைது செய்தனர்.கோவை ரத்தினபுரி போலீஸ் எஸ்.ஐ., மீனாட்சி சுந்தரம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் சத்தி ரோடு ஆம்னி பஸ் ஸ்டாண்டு அருகே, வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தார். அதில், 23 கன்று குட்டிகளை உயிருக்கு ஆபத்தான நிலையில், ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இவைகளை, பொள்ளாச்சி மார்க்கெட்டில் இருந்து காந்திபுரம் மாடு அறுவை மனை பகுதிக்கு கொண்டு சென்றதும் விசாரணையில் தெரிந்தது. இதையடுத்து போலீசார் உக்கடம் கோட்டைமேட்டை சேர்ந்த இறைச்சி வியாபாரி அபுதாஹிர், 37, வெரைட்டி ஹால் ரோட்டை சேர்ந்த இப்ராஹிம் பாதுஷா, 48, தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தை சேர்ந்த டிரைவர் பைரோஸ், 37, ஆகியோரை கைது செய்தனர். 23 கன்று குட்டிகள் மற்றும் சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்தனர். கன்று குட்டிகளை ஒத்தக்கால் மண்டபத்தில் உள்ள கோசாலைக்கு அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை