உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தனியார் பஸ் உரிமையாளருக்கு மிரட்டல்; போலீசார் விசாரணை

தனியார் பஸ் உரிமையாளருக்கு மிரட்டல்; போலீசார் விசாரணை

கோவை, ;சென்னை திருவேற்காட்டை சேர்ந்தவர் தினகரன், 47. கோவை காந்திபுரம் பகுதியில் டிராவல்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் இரு பஸ்களை வாங்கினார். அதற்காக சென்னை திருவேற்காடு பகுதியில் உள்ள, தனியார் நிதி நிறுவனத்தில் மாதத்தவணையில் கடன் பெற்றிருந்த இவர், இரு பஸ்களையும் விற்க முயற்சி செய்தார். இதுகுறித்து அவரது நண்பர் கிருஷ்ண பிரகாஷிடம் தெரிவித்தார். தானே பஸ்களை வாங்கிக் கொள்வதாக அவர் தெரிவித்திருந்தார். அவரால் வாங்க முடியாததால், அவருக்கு தெரிந்த சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவி என்பவருக்கு விற்கலாம் எனத் தெரிவித்தார். ரவி, தான் தனியார் நிறுவனத்தின் கடனை செலுத்தி விடுவதாக தெரிவித்தார். தினகரன், இரு பஸ்களையும் ரவியிடம் கொடுத்தார். ரவி நிதி நிறுவனத்தின் கடனை திருப்பிச் செலுத்தவில்லை. பஸ்களையும் தினகரனிடம் ஒப்படைக்கவில்லை. தினகரன் கேட்டதற்கு, அவரை தகாத வார்த்தைகளால் திட்டிய ரவி, கொலை செய்து விடுவதாக மிரட்டினார். தினகரன், கோவை ரத்தினபுரி போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார் இதுகுறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி