உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கஞ்சா விற்பனை மூவருக்கு சிறை

கஞ்சா விற்பனை மூவருக்கு சிறை

கோவை : கோவை, ஒண்டிபுதுார் நொய்யல் ஆற்றுபாலத்தின் அருகில், கஞ்சா விற்பனை நடப்பதாக சிங்காநல்லுார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு சென்ற போலீசார் சோதனை நடத்தினர்.அப்போது அப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த, மூன்று பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் கஞ்சா இருப்பது தெரிந்தது. விசாரணையில், அவர்கள் கோவை ஒண்டிபுதுாரை சேர்ந்த கணேஷ், 37, தினேஷ்குமார், 22, எஸ்.ஐ.எச்.எஸ்., காலனியை சேர்ந்த கோகுல், 20 எனத் தெரிந்தது. போலீசார் மூவரையும் சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சா, ரூ.4,500 ரொக்கம் ஆகியவற்றை, பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி