உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விற்பனைக்காக கஞ்சா கடத்திய மூவருக்கு சிறை

விற்பனைக்காக கஞ்சா கடத்திய மூவருக்கு சிறை

கோவை: பீளமேடு போலீசார் பீளமேடுபுதுார் பகுதியில், ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் மூவர் நின்றிருந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், மூவரும் முறையாக பதில் அளிக்கவில்லை. அவர்களை போலீசார் சோதனை செய்தனர். அவர்கள் விற்பனைக்காக கஞ்சாவை கடத்தியது தெரிந்தது. விசாரணையில், அவர்கள் உக்கடம் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த கமலேஸ்வரன், 24, சவுரிபாளையம் கல்லறை வீதியை சேர்ந்த மிதிலேஷ், 18, உடையாம்பாளையம் முருகன் கோயில் வீதியை சேர்ந்த செல்வராஜ், 22 எனத் தெரிந்தது. விற்பனைக்காக வடமாநிலங்களில் இருந்து, கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது. மூவரையும் சிறையில் அடைத்த போலீசார் அவர்களிடம் இருந்து, 1.850 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை