உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

தியாகப் பிரம்ம கானாஞ்சலி

ராம்நகர், கோதண்டராமர் கோவிலில், விசேஷ பூஜைகள், ஹோமங்கள், சொற்பொழிவு மற்றும் நாமசங்கீர்த்தனம் நடந்து வருகிறது. இதில், மாலை, 6:15 மணிக்கு, தியாகப் பிரம்ம கானாஞ்சலி, 71ம் ஆண்டு உற்சவம் நடக்கிறது. ஸ்ரீமதி பந்துலா ராமா மற்றும் குழுவினரின் பஞ்சரத்னம் - கோஷ்டிகானம் நடக்கிறது.

அருளானந்தர் தேர்த்திருவிழா

ஆர்.எஸ்.புரம், லாலிரோடு, புனித அருளானந்தர் ஆலயத்தில் தேர்த் திருவிழா நடக்கிறது. காலை, 6:30 மணிக்கு திருப்பலி, காலை, 8:00 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. காலை, 10:00 மணி முதல் ஹோலிமாஸ் மற்றும் மாலை, 5:30 மணிக்கு திருப்பலி நடக்கிறது.

ரேக்ளா திருவிழா

பா.ஜ., வெள்ளலுார் மண்டல் சார்பில், மோடி ரேக்ளா திருவிழா நடக்கிறது. வெள்ளலுார், எல் அண் டி பைபாஸ், எம்.டி.எஸ்., பேக்கரி அருகில், காலை, 6:00 மணி முதல் போட்டிகள் நடக்கின்றன. பா.ஜ. மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொள்கிறார்.

இலக்கியச் சந்திப்பு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில், இலக்கியச் சந்திப்பு நடக்கிறது. ரயில்நிலையம் அருகில், தாமஸ் கிளப்பில், காலை, 10:00 மணிக்கு நடக்கும் நிகழ்வில், 'விடியலை வெளுக்கும் கிழக்கு', ' காலத்தின் மொழி' ஆகிய நுால்கள் வெளியிடப்படுகின்றன. நரவேட்டை நாவல் நுால் அறிமுகம் செய்யப்படுகிறது.

வாங்க சிரிக்கலாம்

கோவை நகைச்சுவை சங்கம் சார்பில், 'வாங்க சிரிக்கலாம்' 21வது நிகழ்வாக நடிகர் சிவக்குமார் பங்கேற்கும் சிறப்புரை நடக்கிறது. திருக்குறள் உரை, திரைப்பட அனுபவங்கள், கேள்வி பதில் நிகழ்ச்சி நடக்கிறது. நவஇந்தியா, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில், மாலை, 5:00 மணிக்கு நிகழ்ச்சி நடக்கிறது.

நுால் வெளியீட்டு விழா

மருதுார் கோட்டீஸ்வரனின் 'வானொலி வசந்தங்கள்' தொகுப்பு நுால், வெளியீட்டு விழா நடக்கிறது. ரேஸ்கோர்ஸ், கோவை உற்பத்தி திறன் குழு அரங்கில், காலை, 10:30 மணிக்கு நிகழ்ச்சி நடக்கிறது.

கலிக்கம் சிகிச்சை முகாம்

திருப்பூர் சமரச சுத்த சத்திய சன்மார்க்க சபை கண்டியன் கோவில் மற்றும் அன்னுார், வள்ளலார் சன்மார்க்க சங்கம் சார்பில், இலவச கண், மூக்கு, காது அருள் மருந்திடல் முகாம் நடக்கிறது. அன்னுார், பழைய பேருந்து நிலையம் அருகே , காலை, சரவணா மகாலில், காலை, 9:00 முதல் மதியம், 10:00 மணி வரை முகாம் நடக்கிறது.

அமைதியின் அனுபவம்

தியானம், அன்பு பகிர்தல், இயற்கை, நேர்மறை எண்ணம் ஆகியவற்றின் மூலம் மன அமைதியை அனுபவிக்கலாம். அண்ணாசாலை எதிரில், ஓசூர் ரோட்டில் அமைந்துள்ள, ஆருத்ரா ஹாலில், இலவச வீடியோ சத்சங் நடக்கிறது. 'நம்முள் அமைதியின் அனுபவம் சாத்தியமே' என்ற தலைப்பில், காலை, 11:00 மணிக்கு, சத்சங் நடக்கிறது.

இலக்கியச் சிறப்புரை

தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம் சார்பில், மாதாந்திர இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. 'பாரதி பாடல்களில் தொல்காப்பியத் தாக்கம்' என்ற தலைப்பில் சிறப்புரை, தொல்காப்பியர் பயிலரங்கு, நுால்வெளியீடு நடக்கிறது. பேரூர், தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லுாரி வளாக்தில், காலை, 9:30 முதல் மதியம், 1:30 மணி வரை நடக்கிறது.

குடிநோய் விழிப்புணர்வு முகாம்

ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், சுண்டக்காமுத்துார், டி.எஸ்.,நர்சரி பள்ளியில், காலை, 10:30 முதல் மதியம், 12:00 மணி வரை நடக்கிறது. குனியமுத்துார், டிவைன் மேரி சர்ச்சில், மாலை, 6:30 முதல், இரவு, 8:30 மணி வரை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ