உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

சித்திரைத் திருவிழா

அவிநாசி ரோடு, தண்டுமாரியம்மன் கோவிலில் சித்திரைப் பெருந்திருவிழா விமரிசையாக நடந்து வருகிறது. இன்று, இரவு, 7:00 மணிக்கு, ஸ்ரீ கணநாதர் பொம்மை நாடக சபாவின் கிராமிய பொம்மலாட்டம் நடக்கிறது. நாளை, சங்காபிஷேகம், வசந்த உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.

சாய்பாபா பஜன்

ராம்நகர், கோதண்டராமசுவாமி கோவிலில் விசேஷ பூஜைகள், ஹோமங்கள், சொற்பொழிவு மற்றும் நாமசங்கீர்த்தன நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. இன்று கோவிலில், ஸ்ரீமத் அபிநவ வித்யா தீர்த்த பிரவசன மண்டபத்தில், மலை, 6:30 மணி முதல், சீரடி சாய்பாபா பஜன் நடக்கிறது.

பதவி ஏற்பு விழா

தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில், கோவை மாவட்டத் தலைவர் மற்றும் நிர்வாகிகள் பதவி ஏற்கும் விழா நடக்கிறது. ராஜவீதி, ஸ்ரீ சங்கர மடத்தில், காலை 10:00 மணிக்கு நடக்கும் விழாவில், வேதகோஷம், சங்க உறுதிமொழி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடக்கின்றன.

சிந்தனை அரங்கம்

பாரதீய வித்யா பவன் சார்பில், 182வது சிந்தனை அரங்க சிறப்பு நிகழ்ச்சி, பவன் வளாகத்தின் கருத்தரங்க அறையில், மாலை, 5:00 மணிக்கு நடக்கிறது. 'அணுவாற்றலின் பயன்பாடுகள்' என்ற தலைப்பில், கல்பாக்கம் இந்திரா காந்தி அணுவியல் ஆய்வு மைய அறிவியலாளர் மேரி சிறப்புரையாற்றுகிறார்.

பட்டமளிப்பு விழா

குமரகுரு கல்வி நிறுவனங்களின் 37வது பட்டமளிப்பு விழா, குமரகுரு கல்லுாரி வளாகத்தில் இன்றும், நாளையும் நடக்கிறது. கல்லுாரி வளாகத்தில், காலை, 10:00 மணி முதல் நடக்கும் விழாவில், முன்னாள் இந்திய துாதர் பங்கஜ் சரண் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

ஆண்டு விழா

அரசூர், கே.பி.ஆர்.,பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில், 'விருட்சம்' 25ம் ஆண்டு விழா நடக்கிறது. விப்ரோவளாக நேர்க்காணலில்தேசிய தலைவர் ராதிகா சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார். கே.பி.ஆர்., குழும தலைவர் ராமசாமி, செயலாளர் காயத்ரி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

மண்டல பூஜை நிறைவு

சரவணம்பட்டி, கரட்டுமேடு, ரத்தினகிரி குமரக்கடவுள் கோவிலில், 48ம் நாள் மண்டல பூஜை நிறைவு விழா நடக்கிறது. காலை, 6:30 முதல் 11:30 மணி வரை, திருவிளக்கு வழிபாடு, மூத்தபிள்ளையார் வழிபாடு, வேள்வி வழிபாடு, சன்னதிகளுக்கு திருக்குட நீராட்டு, திருவிளக்கு வழிபாடு, மகா அபிஷேகம், சுவாமிகளுக்கு திருக்குட நீராட்டு மற்றும் பேரொளி வழிபாடு நடக்கிறது.

ஓவியக் கண்காட்சி

அவிநாசி ரோடு, கஸ்துாரி சீனிவாசன் கலை மையத்தில், இந்தாண்டுக்கான 'ரிதமிக் பேலட்' தொடரின் ஐந்தாவது ஓவியக் கண்காட்சி நடந்து வருகிறது. காலை, 10:00 முதல் மாலை, 6:30 மணி வரை பொதுமக்கள் கண்காட்சியை பார்வையிடலாம்.

நிர்வாகிகள் பொறுப்பேற்பு

பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியாவின், புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகள்பொறுப்பேற்கும் நிகழ்ச்சி, இன்று நடக்கிறது. அவிநாசி ரோடு, சின்னியம்பாளையம், பிருந்தாவன் ஆடிட்டோரியத்தில், மாலை, 6:00 மணிக்கு நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி