உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

ஆண்டு பெருந்திருவிழா

ஒத்தக்கால்மண்டபம், புற்றிடங்கொண்டீசர் பூங்கோதையம்மன் கோவிலில், 16ம் ஆண்டு பெருந்திருவிழா நடக்கிறது. இன்று, காலை, 4:00 மணி முதல் வேள்வி துவங்குகிறது. காலை, 8:30 மணிக்கு, இடபக் கொடியேற்றம், கொடிக்கவி வழிபாடு நடக்கிறது. மாலை, 6:30 மணிக்கு, சோமாசுக்கந்தர், அம்மை மற்றும் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடக்கிறது.

உத்தவ் கீதை

பாரதீய வித்யா பவன் சார்பில், ஆனைக்கட்டி, ஆர்ஷ வித்யா குருகுலத்தின் பூஜ்யஸ்ரீ சுவாமிபரமார்த்தானந்தரின் சிறப்பு சொற்பொழிவு நடக்கிறது. ஆர்.எஸ்.புரம், பவன் வளாகத்தில், 'அபரோக்சானுபூதி' என்ற தலைப்பில் காலை, 6:30 மணி முதலும், 'உத்தவ - பாகம் 8' என்ற தலைப்பில் மாலை, 6:30 மணி முதலும் சொற்பொழிவு நடக்கிறது.

சித்திரைத்திருவிழா

ராம்நகர், விவேகானந்தர் ரோடு, வி.என்.தோட்டத்தில் முத்துமாரியம்மன் கோவிலில், 43ம் ஆண்டு சித்திரை உற்சவ திருக்கல்யாண மகோற்சவ வைபவம் நடக்கிறது. இன்று மாலை அம்மனுக்கு, திருச்சானுார் பத்மாவதி தாயார்,சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அருள்பாலிக்கிறார்.

தொழிலாளர் தின விழா

ஏ.பி.ஜே., அப்துல்கலாம் இன்டர்நேஷனல் பவுண்டேஷன் சார்பில், தொழிலாளர் தின விழா நடக்கிறது. கொடிசியா அருகே, ஆருத்ரா ஹாலில், மாலை, 5:30 மணிக்கு நடக்கும் விழாவில், சிறந்த தொழிலாளர், சிறந்த தொழில் நிறுவனங்கள் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படவுள்ளனர்.

ஆறாட்டு உற்சவம்

குறிச்சி ஹவுசிங் யூனிட், பேஸ் - 1 விரிவாக்கம், தர்ம சாஸ்தா கோவிலில், 29ம் ஆண்டு ஆறாட்டு உற்சவம் நடக்கிறது. பள்ளிக்குறுப்பு உணர்த்துதல், திருக்கனி தரிசனம், யானை ஊட்டு, சத்ரு சம்ஹார ஹோமம், காலை, 6:00 முதல் 10:0 மணி வரை நடக்கிறது. மாலை, 5:30 மணிக்கு சுவாமி ஊர்வலம், இரவு, 9:30 மணி முதல், சிறப்பு பறை, ஆறாட்டு ஜோதி தரிசனம், கொடியிறக்கம், அத்தாழபூஜை நடக்கிறது.

தொழில் வழிகாட்டல்

கருமத்தம்பட்டி, ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரியில், மாணவர்களுக்கு தொழில் வழிகாட்டல் முகாம் காலை, 10:00 மணி முதல் நடக்கிறது. இதில், பல்வேறு தொழில்துறை வல்லுனர்கள், முன்னாள் மாணவர்கள் பங்கேற்று, மாணவர்களுக்கு பயிற்சி மற்றும் வழிகாட்டலை வழங்கவுள்ளனர்.

சர்வதேச பொறியியல் கருத்தரங்கு

க.க.சாவடி, வீரப்பனுார், தானிஷ் அஹமது பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில், 'பொறியியல் தொழில்நுட்பத்தில் சமீபத்திய முன்னேற்றங்கள்'என்ற தலைப்பில், சர்வதேச கருத்தரங்கு நடக்கிறது. காலை, 10:00 மணிக்கு, கல்லுாரி வளாகத்தில நடக்கும் கருத்தரங்கில், சர்வதேச பொறியல் துறை வல்லுனர்கள் பங்கேற்கின்றனர்.

குடிநோய் விழிப்புணர்வு முகாம்

தொடர்ச்சியான சிகிச்சை மூலம் குடிப்பழக்கத்திலிருந்து விடுபட முடியும். ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், போத்தனுார், புனித ஜோசப் சர்ச் மற்றும் கோவைப்புதுார், ஆஷ்ரம் பள்ளியில் நடக்கிறது. இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை, முகாம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ