உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

ஸ்ரீமத் பாகவத சப்தாஹம் மஹாரண்யம் முரளீதர சுவாமிகளின் சிஷ்யர்களால், கோவை ராம்நகர் ராமர் கோவிலில் ஸ்ரீமத் பாகவத சப்தாஹம் நடக்கிறது. காலை 7 மணி முதல் பாராயணமும், மாலை 6 மணி முதல் உபன்யாசமும் நடக்கிறது. கோடி நாம அர்ச்சனை சத்ய சாயி சேவா நிறுவனங்கள் தமிழ்நாடு தெற்கு கோவை மாவட்டம் சார்பில், சத்ய சாயி கோடி நாம அர்ச்சனை பூர்த்தி பூஜை நடக்கிறது. மாலை 4 முதல் மாலை 6.30 மணி வரை, கோடி நாம அர்ச்சனை இறுதி ஆர்த்தி, வேத மந்திரம், சாய் பஜனை, பூர்த்தி பூஜை மற்றும் மங்கள ஆரத்தி நடக்கிறது. அர்த்தஜாம அபிஷேகம் புரட்டாசி வளர்பிறை சதுர்த்தியை முன்னிட்டு, ஆர்.எஸ்.புரம், யு.எஸ்.,ஆர்த்தி ஹாஸ்டல் வளாகத்தில் அர்த்தஜாம அபிஷேகம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு துவங்கும் விழாவில் பக்தர்கள் பேதமின்றி, தங்கள் கைகளாலேயே, பால் அபிஷேகம் மற்றும் வில்வம் சமர்ப்பணம் செய்யலாம். மாதாந்திர அபிஷேக விழா கோவை நகரத்தார் இளைஞர் சங்கம் சார்பில், 648வது மாதாந்திர அபிஷேக விழா நடக்கிறது. பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பாலதண்டாயுதபாணி சன்னதியில், காலை 9 மணிக்கு, அபிஷேகம், ராஜ அலங்காரம் நடக்கிறது. சண்டி மஹா ஹோமம் கே.என்.ஜி. புதுார் பிரிவு, தடாகம் ரோடு, சிவகுரு மகாவிஷ்ணு கோயிலில், உலக நன்மைக்காக நட்சத்திர மண்டல சண்டி ஹோமம் நடக்கிறது. காலை 9 முதல் சக்கர நவாவரண பூஜை, மாலை 5 மணி முதல் சண்டி ஹோமம் நடக்கிறது. இலவச மருத்துவ முகாம் குறிச்சி கம்பீர விநாயகர் கோவிலில், சர்க்கரை நோயாளிகளுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் காலை 9 முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. குறிச்சி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் லயன்ஸ் சங்கம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் டாக்டர் ராஜேந்திரன் டயாபடீஸ் சென்டர் இணைந்து நடத்துகின்றன. நவசண்டி யாக விழா அகர்வால் ஸ்கூல் ரோடு, கே.என்.ஜி. புதுார் பிரிவு பஸ் ஸ்டாப், திரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோவிலில், 29வது மகா நவசண்டி யாக விழா நடக்கிறது. காலை 7 மணி முதல் பல்வேறு பூஜைகள் நடக்கின்றன. மாலை 5.30 மணி முதல் நவசண்டி யாக வழிபாடுகள் துவக்கம், ஹோமம், முதற்கால பூஜைகள் நடக்கின்றன. கீதை உபதேசம் ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன் சார்பில் சுவாமி தயானந்த சரஸ்வதியின் வீடுதோறும் கீதா உபதேசம் நிகழ்ச்சி நடக்கிறது. டாடாபாத், 104, மூன்றாவது வீதி, ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷனில் மாலை 5 மணிக்கு நடக்கிறது. குடிநோய் விழிப்புணர்வு முகாம் தொடர்ச்சியான சிகிச்சை மூலம் குடிப்பழக்கத்திலிருந்து விடுபட முடியும். ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், போத்தனுார், புனித ஜோசப் சர்ச் மற்றும் கோவைப்புதுார், ஆஷ்ரம் பள்ளி வளாகத்தில் நடக்கிறது. இரவு 7 முதல் 8.30 மணி வரை முகாம் நடக்கிறது. விஜயதசமி விழா ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கம் சார்பில், 100ம் ஆண்டு விஜயதசமி விழா நடக்கிறது. சுந்தராபுரம், மாச்சம்பாளையம், துளசி கார்டனில் மாலை 5.15 மணிக்கு விழா நடக்கிறது. அமைதியின் அனுபவம் தியானம், அன்பு பகிர்தல், இயற்கை, நேர்மறை எண்ணம் ஆகியவற்றின் மூலம் மன அமைதியைஅனுபவிக்கலாம். அண்ணாதுரை சிலை எதிரில், ஓசூர் ரோட்டில் அமைந்துள்ள, ஆருத்ரா ஹாலில், இலவச வீடியோ சத்சங்கம் நடக்கிறது. 'நம்முள் அமைதியின் அனுபவம் சாத்தியமே' என்ற தலைப்பில், காலை 11 மணிக்கு சத்சங்கம் நடக்கிறது. விபத்தில்லா கோவை கோவை மாவட்ட நிர்வாகம், மாநகர காவல் துறை மற்றும் உயிர் அமைப்பு சார்பில் விபத்தில்லா கோவையை உருவாக்க, 'ரன் அண்ட் வாக்' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடக்கிறது. நேரு ஸ்டேடியத்தில் காலை 5.45 மணிக்கு துவங்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை