உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

 மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

ஓவியக் கண்காட்சி 16வது பார்பரா சீனிவாசன் நினைவு நுண்கலை கல்லுாரி மாணவர்களுக்கான விருதுகள் மற்றும் 29வது ஓவியப் பயிற்சி துவக்க விழா நடக்கிறது. நுண்கலை விருது போட்டியில் கலந்துகொண்ட மாணவர்களின் ஓவியங்கள், காலை 10 முதல் மாலை 6 மணி வரை காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. கண் பரிசோதனை முகாம் லோட்டஸ் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் காலை 9 முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது. கோவை வடக்கு தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு கண் பரிசோதனை முகாம் நடக்கிறது. ஆண்டு விழா உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம் சார்பில் 12ம் ஆண்டு விழா, சிற்பி 90ம் அகவை விழா காளப்பட்டி ரோடு, டாக்டர் என்.ஜி.பி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடக்கிறது. காலை 10 மணிக்கு நடக்கும் நிகழ்வில் எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் கலந்துகொள்கிறார். ஷாப்பிங் திருவிழா 'கொடிசியா' சார்பில், 11வது கோயம்புத்தூர் ஷாப்பிங் திருவிழா நடந்து வருகிறது. ஒன்பது மாநிலங்களில் இருந்து 500 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. சலுகை விலையில் வீட்டு உபயோகப் பொருட்கள், பர்னிச்சர், உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்கலாம். மாலை 6.30 மணி முதல் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெறும். பூஜா மகோற்சவம் ராம்நகர், ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கம் 75வது பூஜா மகோற்சவம் நடக்கிறது. ஹரிஹரபுத்ர மூலமந்திர ஹோமம், புருஷஸூக்த ஹோமம், சந்தான கோபாலகிருஷ்ண ஹோமம், ஸ்வயம்வரா பார்வதி ஹோமம், ஐயப்பன் லட்சார்ச்சனை, அஷ்டாபிஷேகம், அன்னதானம், மகா பூர்ணாஹூதி, மகா தீபாராதனை நடக்கிறது. மாலை 6.15 மணிக்கு பக்தி இசை நிகழ்ச்சி நடக்கிறது. வெல்லட்டும் வேளாண்மை 'தினமலர்' நாளிதழ் சார்பில் 'வெல்லட்டும் வேளாண்மை' என்ற தலைப்பில் வேளாண் வணிகத் திருவிழா, கோவை ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி அரங்கில் இன்று நடக்கிறது.விவசாயிகள் தினத்தை முன்னிட்டு விவசாயிகள், வேளாண் தொழில் முனைவோரை கவுரவித்து, கொண்டாடும் வகையில் காலை 10 முதல் மதியம் 1 மணி வரை கருத்தரங்கும், மாலை 4 மணி வரை கண்காட்சியும் நடக்கிறது. குடிநோய் விழிப்புணர்வு முகாம் தொடர்ச்சியான சிகிச்சையால் குடிப்பழக்கத்திலிருந்து விடுபட முடியும். ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், போத்தனுார், புனித ஜோசப் சர்ச் மற்றும் கோவைப்புதுார், ஆஷ்ரம் பள்ளி வளாகத்தில் நடக்கிறது. இரவு 7 முதல் 8.30 மணி வரை முகாம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை