உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

பசுமை நிறைந்த நினைவுகளே!

மீண்டும் ஒரு முறை கிடைத்துவிடாதா என, நாம் அனைவரும் ஏங்கும் காலம், அவரவர் கல்லுாரி காலம். கல்லுாரி நட்புகளை மீண்டும் சந்திப்பது என்றால் சும்மாவா... அதுபோன்று, முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு, கோவை கருமத்தம்பட்டி ஜான்சன் தொழில்நுட்ப கல்லுாரியில், இன்று காலை, 10:00 மணியளவில் நபைபெறுகிறது.* சபர்பன் மேல்நிலைப்பள்ளியில், 1994ம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்தவர்களின், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு, இன்று காலை, 9:00 மணிக்கு துவங்குகிறது.

என்றென்றும் எஸ்.பி.பி.,

எஸ்.பி.பி., பாடல்கள் கேட்டாலே குதுாகலம் தான். அவரின், மெல்லிசை தென்றல் இசை நிகழ்வு ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் நடக்கிறது. கிக்கானி மேல்நிலைப்பள்ளியில், மாலை, 6:00 மணிக்கு துவங்கும் இந்நிகழ்வுக்கு, அனுமதி கட்டணம் ஏதும் இல்லை. இசை மழையில் நனைய விரும்புவோர் பங்கேற்று மகிழலாம்.

நவராத்திரி கலைவிழா

சிவானந்தபுரம், புரோசோன் மாலில், நவராத்திரி உற்சவ கொண்டாட்ட கலை விழாக்களின் நிறைவு நாள் நிகழ்வுகள் இன்று மாலை, 3:00 மணியளவில் துவங்குகின்றன.

மெல்லிசையில் எம்.ஜி.ஆர்.,

இதயக்கனி மாத இதழுடன், கோவை லயன்ஸ் கிளப் ஆப் இன்டர்நேஷனல் இணைந்து வழங்கும் மலேசியா மெல்லிசை கலைஞர்களின் எம்.ஜி.ஆர்., பாடல்கள் இசை நிகழ்ச்சி, பேரூர் சிறுவாணி மெயின் ரோட்டில் உள்ள, விக்னேஷ் மகாலில் நடைபெறவுள்ளது. மதியம், 3:00 முதல் இரவு 9:00 மணி வரை இசை கச்சேரி தொடரும்.

சேவை தொடரட்டும்

அன்னுார் டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் திருப்பூர் ரோட்டரி ஐ.எம்.ஏ., ரத்த வங்கி இணைந்து நடத்தும், ரத்த தான முகாம் இன்று காலை, 9:00 முதல் மதியம், 2:00 மணி வரை அன்னுார் மேட்டுப்பாளையம் ரோடு, சரவணா ஹாலில் நடக்கிறது.இதில் ரத்த தானம் அளிக்கும் அனைவருக்கும் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான விபத்து காப்பீடு, ஓராண்டுக்கு வழங்கப்படவுள்ளது.

மிருதங்க இசை கச்சேரி

மிருதங்க மாமேதை கணபதி ஐயர் நினைவு நவராத்திரி இசை விழா, கோவை ஏரோடிரோம் போஸ், பூம்புகார் நகரில் மாலை, 4:15 மணிக்கு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை