உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

கந்த சஷ்டி விழா

* மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், காலை, 10:00 மணி முதல் மதியம், 12:00 மணி வரை யாகசாலை பூஜை மற்றும் அபிஷேக பூஜையும், மாலை, 5:00 மணி முதல் 7:00 மணி வரை சுவாமி திருவீதி உலா நிகழ்வு நடக்கிறது.* சுக்கிரவார்பேட்டை, பாலதண்டாயுதபாணி திருக்கோவிலில், காலை, 10:00 மணிக்கு அபிஷேகம், மதியம் 12:30 மணிக்கு தீபாராதனை, மாலை, 5:00 மணிக்கு வெங்கடாசலபதி சிறப்பு அலங்காரம்.* பேரூர் பட்டீஸ்வரர் கோவில், பாலதண்டாயுதபாணி சன்னதியில் அபிஷேக விழா காலை, 10:00 மணிக்கு நடைபெறுகிறது.

மண்டல நிறைவு விழா

இடையர்பாளையம், குனியமுத்துார் மகாலட்சுமி அம்மன் கோவில் 48ம் நாள் மண்டல பூஜை நிறைவு விழா இன்று நடக்கிறது. காலை, 7:00 மணி முதல் பல்வேறு பூஜைகளுக்கு பின்னர், மதியம், 1:00 மணிக்கு மகா அன்னதானம் மற்றும் மாலை, 4:00 மணிக்கு வள்ளிகும்மி கலை நிகழ்வு, மாலை, 6:00 மணிக்கு அம்மன் திருவீதி உலா நடக்கவுள்ளது.

ஆஹா கண்ணதாசா

கவிஞர் கண்ணதாசனை கொண்டாடும் வகையில், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் ஆஹா கண்ணதாசா நிகழ்வு, கிக்கானிக் மேல்நிலைப்பள்ளியில் மாலை, 6:30 மணிக்கு துவங்குகிறது. 'கண்ணதாசன் ஏத்தும் இன்பம்' என்ற தலைப்பில் பர்வீன் சுல்தானாவும், 'கண்ணதாசன் காட்டும் வீடு' என்ற தலைப்பில் மரபின் மைந்தன் முத்தையா ஆகியோர் பேசவுள்ளனர்.

உயர்ந்த பக்தி எது

டெப்ரீ இன்ஜீனியரிங் நிறுவனம் சார்பில், 'உயர்ந்த பக்தி எது' சங்கீர்த்தனம் இன்று மாலை, 6:00 மணிக்கு ராம்நகர் ஸ்ரீ ராம்லட்சுமி ஹாலில் நடக்கிறது.

செல்வத்துள் செல்வம்

திருக்குறள் உலகம் கல்விச்சாலை சார்பில், செல்வத்தின் நன்மையும் தீமையும் என்ற தலைப்பில் பயிலரங்கு நடைபெறவுள்ளது. நிகழ்வு, பூமார்கெட் தேவாங்க பேட்டை தெரு மலர்அங்காடியிலுள்ள, விவேகானந்தர் இல்ல பள்ளி வளாகத்தில், மாலை, 6:30 மணி முதல் 8:00 மணி வரை பயிலரங்கு நடக்கிறது.

குடிநோய் விழிப்புணர்வு முகாம்

மனக்கட்டுப்பாட்டுடன், உரிய சிகிச்சை பெற்றால் குடிநோயிலிருந்து எளிதாக மீண்டு வரலாம். ஆல்ஹாலிக்ஸ் அனானிமஸ் சார்பில், சுண்டக்காமுத்துார் டி.எஸ்., நர்சரி பள்ளியில் காலை, 10:30 மணி முதல் மதியம் 12:00 மணி வரையும். பாலக்காடு மெயின் ரோட்டில் டிவைன் மேரி சர்ச்சில் மாலை, 6:30 மணி முதல் 8:30 மணி வரை குடிநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெறவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ