அசோகபுரம் அரசு பள்ளிக்கு ரூ.30 லட்சத்தில் கழிவறை
கோவை; கிரிஷா அறக்கட்டளை சார்பில், 'எமரால்டு' நிறுவனத்தின் சி.எஸ்.ஆர்., திட்டம் வாயிலாக, அசோகபுரம் அரசு துவக்கப்பள்ளிக்கு, 30 லட்சம் ரூபாயில் கழிவறை கட்டிக்கொடுக்கப்பட்டது. 'எமரால்டு' நிறுவன சி.எஸ்.ஆர். நிதி வாயிலாக, 10வது அரசு பள்ளியாக இப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கலெக்டர் பவன்குமார், கட்டடத்தை திறந்து வைத்து, சுகாதாரத்தின் முக்கியத்தும் குறித்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 'எமரால்டு' நிறுவன தலைவர் நிர்வாக இயக்குனர் சீனிவாசன், முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, 'எமரால்டு' சி.எஸ்.ஆர். திட்ட மேலாளர் தினேஷ்குமார், வட்டார கல்வி அலுவலர்கள், பள்ளி ஆசிரியர் பொற்கொடி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.