உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இடியும் நிலையில் கழிப்பிடம்; அவதிக்குள்ளாகும் மக்கள்

இடியும் நிலையில் கழிப்பிடம்; அவதிக்குள்ளாகும் மக்கள்

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, நெ.10.முத்தூர் ஊராட்சியில் உள்ள பொதுக்கழிப்பிடம் இடியும் நிலையில் இருப்பதால், மக்கள் அவதிப்படுகின்றனர்.கிணத்துக்கடவு, நெ.10.முத்தூர் ஊராட்சி, நூலகம் எதிரே உள்ள ரோட்டில் பொதுக்கழிப்பிடம் உள்ளது. இந்த கட்டடம் கட்டப்பட்டு, 15 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. இந்த கழிப்பிடத்தை அப்பகுதி மக்கள் பயன்படுத்துகின்றனர்.கழிப்பிட கட்டடத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால், மேற்கூரை கான்கிரீட் பெயர்ந்து விழும் நிலையில் உள்ளது. கழிப்பிடம் முழுதும் அலங்கோலமாக காட்சியளிக்கிறது. இந்த கட்டடத்தை சுற்றிலும் செடி, கொடிகள் முளைத்துள்ளது. கழிப்பிட கட்டடம் உருக்குலைந்து இருப்பதால், பயன்படுத்த மக்கள் அச்சப்படுகின்றனர்.இதே பகுதியில், புதிதாக கழிப்பிடம் கட்டும் பணி நீண்ட நாட்களாக நடக்கிறது. இந்த பணியை விரைவாக முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும். மேலும், சேதமடைந்த கழிப்பிடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும்.இங்கு உள்ள பெண்கள் சுகாதார வளாகப் பகுதியில், காலி மது பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் குப்பை போன்றவை கிடக்கிறது. இதனால் பெண்கள் சிரமப்படுகின்றனர். சுகாதார வளாகத்தை துாய்மையாகவும், பாதுகாப்பாகவும் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை